செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்ட நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி செந்தில் பாலாஜி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக அரசையும் அதிர செய்து இருக்கிறது.
அதிலும் உச்ச நீதிமன்றம் அமலாக்க துறைக்கு ரிலீப் கொடுக்க வேண்டும் எனவும், அமலாக்க துறைக்கு அதிகாரம் பொருந்தியவர்களை கைது செய்ய அதிகாரம் இருக்கிறது என இரண்டு முறை நீதி பதிகள் குறிப்பிட்ட நிலையில் தற்போது கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது செந்தில் பாலாஜி தரப்பு.. மேலும் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்பிற்கு பைபாஸ் தெரிவித்து இருப்பது செந்தில் பாலாஜியை மட்டுமல்ல ஆளும் திமுக அரசையும் அதிர செய்து இருக்கிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. பின்னர், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜியை காவிரி மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்தது.
அப்போது, செந்தில்பாலாஜியை 16 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அதற்கு, 8 நாட்கள் அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், விசாரணைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதன் காரணமாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, கோடைக்கால சிறப்பு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது சரியானது அல்ல. ஒருவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்போது இதுபோன்ற மனுவை பரிசீலிப்பதே தவறு. இது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும்.
செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்ததும் ஏற்கத்தக்கதல்ல. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், "செந்தில்பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது. உயர் நீதிமன்றம் தவறாக நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது எனக் கருத வேண்டாம்
உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறதே தவிர, ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை ஆட்கொனர்வு மனு குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.அதோடு அமலாக்க துறைக்கு ஒருவரை கைது செய்ய அதிகாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டு இருக்கிறது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டி காட்டிய தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் விசாரணை செய்ததே தவறு என்பதை தான் உச்ச நீதிமன்றம் நாசுக்காக சொல்லி இருக்கிறது.
செந்தில் பாலாஜி போன்று இனி பலரும் கைதுக்கு பயந்து ஒரு மருத்துவமனையில் படுத்து கொண்டால் சட்டம் என்ன ஆகும் எனவும் தமிழ் மணி குறிப்பிட்டு இருக்கிறார், இதற்கு உச்ச நீதிமன்றமே விரைவில் தீர்வு சொல்லும் எனவும் தமிழ் மணி குறிப்பிட்டு இருக்கிறார்.செந்தில் பாலாஜி ஒரு 10 நாட்கள் அமலாக்கதுறை விசாரணையில் இருந்து தப்பித்து இருக்கலாம் ஆனால் இனி வரும் நாட்கள் தான் செந்தில் பாலாஜியை மட்டுமல்ல ஆளும் திமுக அரசையும் புரட்டி போடும் சம்பவங்கள் அரங்கேர போகிறது என அடித்து கூறுகின்றன செந்தில் பாலாஜி வழக்கு பற்றிய ரகசியம் தெரிந்தவர்கள்.
ஏற்கனவே செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கில் எப்படி உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை விசாரனை செய்யலாம் என அனுமதி அளித்தது. தற்போது மீண்டும் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்க துறைக்கு விரைவில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஏதாவது பிறப்பிக்க போகிறதோ என்ற அதிர்ச்சியில் இருக்கிறதாம் ஆளும் கட்சி வட்டாரங்கள்.