கிசுகிசுவாக வலம்வந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக வெளியிட்ட வீடியோவால் திமுக தரப்பு திக்குமுக்காடிப்போய் உள்ளது!சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆக இருக்கும் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளதன் காரணமாக அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது அறிவாலய வட்டாரத்திற்கு இடியை இறக்கியது.
இந்த வழக்கில் இணை குற்றவாளியான அமைச்சரின் மகன் கௌதமசிகாமணி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே விரைவில் இவர்கள் மீதும் அமலாக்க துறையினர் ரெய்டு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2007 மற்றும் 2011 க்கு இடையில் பொன்முடி தனது சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பதவியை துஷ்பிரயோகம் செய்ததற்காக குவாரி உரிம நிபந்தனைகளை மீறி கருவூலத்திற்கு ₹28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இந்த வழக்கு தொடர்புடையது.
திமுக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி 2007 முதல் 2011 வரை சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து குவாரி உரிமம் பெற்றதாக சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தொடரப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக மறுத்து இருக்கிறது. இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக உள்ள அமைச்சரின் மகன் கௌதமசிகாமணியின் தடை மனுவை நீதிபதி சந்திரசேகரன் தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் அடுத்த ரெய்டு பொன்முடிக்குத்தான் என செய்திகள் உலாவந்த நிலையில் தமிழக பாஜக தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று அமைச்சர் பொன்முடியை நிலைகுலைய செய்துள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் செய்வதறியாது திகைத்து நிற்கும் திமுகவிற்கு அமைச்சர் பொன்முடி விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் அடித்து கூறுகின்றனர்.இந்த நிலையில் திருவாரூரில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கூட முதல்வர் நிம்மதியாக கொண்டாடவில்லை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன!