24 special

விசாரணைக்கு வராத செந்தில் பாலாஜி தம்பி...!அதிரடி காட்ட போகும் அமலாக்கத்துறை...!

Senthil balaji,ashok kumar
Senthil balaji,ashok kumar

விசாரணைக்கு வர முடியாது என அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி தம்பி மறுத்ததன் காரணமாக அதிரடி கட்டப்போகும் அமலாக்கத்துறை!தமிழக அரசியலில் ஆளுங்கட்சியை ஆட்டம் காண வைத்த ஒரு நிகழ்வு என்றால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது! செந்தில்பாலாஜியை கைது செய்யும் சமயத்தில் அவருக்கு நெஞ்சு வலி என கதறி அழுததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் பரிந்துரையால் தற்போது அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளளது.


இருப்பினும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னதாக அமலாக்கத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜியை எடுத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தது அதன்படி நீதிமன்றமும் அமலாக்கத்துறையில் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய பிறகும் செந்தில் பாலாஜி வசம் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் முற்படும்போது ஏதாவது ஒரு காரணத்தை கூறிமருத்துவர்கள் மறுத்து வந்தனர். இது செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளாமல் இருக்க அவரது தரப்பினர் போடும் முட்டுக்கட்டை என அமலாக்கத்துறை கூறி வந்தது.

இதனால் கோபம் அடைந்த அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்வது பற்றிய வழக்கை மேல்முறையீடு செய்துள்ளது அந்த வழக்கு மீதும் இன்று விசாரணை நடைபெறுகிறது. இப்படி செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை என்பதால் அவரது தம்பி அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகம்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஏனென்றால் செந்தில் பாலாஜியின் ஊழல் மற்றும் மோசடி காரியங்களுக்கு பின்னால் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இருந்துள்ளார் என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய பொழுது அதில் ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் அசோக்குமார் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பும் அடங்கும். இதற்கு முன்னதாக கரூர் கேங்க் என்று கூறப்பட்டு வந்த கரூர் கம்பெனியும் அசோக்குமாருக்கு சம்பந்தப்பட்டது என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

இதனாலையே செந்தில் பாலாஜி விசாரிக்க முடியாததால் மேற்கொண்டு வழக்கை நகர்த்த அவரது சகோதரரான அசோக்குமாரை விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது, சம்மன் அனுப்பிய பொழுதே அவர் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாமல் போனது தலைமறைவாகிவிட்டார் என்ற தகவலும் செய்திகளில் வெளியாகியது. முன்னதாக செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கு மற்றும் அவரது மனைவி வங்கி கணக்குகளில் முறைகேடாக பணங்கள் இருந்துள்ளது, சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கான ஆதாரங்கள் இருந்த காரணத்தினால் விசாரணை செய்வதற்காக அசோக் குமார் மற்றும் சண்முகம் ஆகியோருக்கு பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது அதற்கு எதற்குமே அவர்கள் பதில் அளிக்காத காரணத்தினாலேயே செந்தில் பாலாஜியை கைது வேண்டியதாயிற்று என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த பதில் விளக்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது கேட்கும் ஆவணங்களை தயார் செய்யவும், மேலும் இதனை சட்டரீதியாக நகர்த்த வேண்டியதால்,  இந்த குறிப்பிட்ட தேதியில் ஆஜராக முடியாது என்று கூறியுள்ளார். மேலும் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ள நிலையில் அவரது சகோதரர் விசாரணைக்கு வர மறுப்பதால் அமலாக்கத்துறை எந்த நேரமும் அசோக் குமாரை கைது செய்யலாம் என்ற தகவல் வெளிவந்து செந்தில் பாலாஜி தரப்பை தற்போது அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இப்படி செந்தில்பாலாஜி தம்பி எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவல் அறிவாலய வட்டாரத்தை நிலைகுலைய செய்துள்ளது.