24 special

கேரளாவில் சுரேஷ் கோபி நடுரோட்டில் செய்த சம்பவம்...

SURESH GOBI
SURESH GOBI

இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய கட்சியாக தற்போது உருவெடுத்து இருப்பது தான் பாரதிய ஜனதா கட்சி! 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கட்சியின் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடி அவர்களும் மாநிலங்களவை தலைவராக பியூஸ் கோயில் மற்றும் இக்கட்சியின் தலைவராக ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோரும் பொறுப்பு வகிக்கிறார்கள். இவர்களின் சீரிய முயற்சியால் நாட்டில் பெரும்பான்மையாக ஆதிக்கத்தை செலுத்தி வந்த காங்கிரஸ்சிற்கு மாறாக நாட்டில் உருவாகியது அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அடல் பிகாரி வாஜ்பாய் 1998 முதல் 2004 வரை இந்தியாவில் பிரதமராக பொறுப்பில் அமர்ந்தார். காங்கிரஸே இல்லாத ஒரு அரசு தன்னுடைய முழு ஐந்து வருட ஆட்சியையும் முடிவு செய்தது பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் காலத்தில் தான்! அதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.


அதற்குப் பிறகு எதிர்க்கட்சியாக விளங்கி வந்த பாரதிய ஜனதா கட்சி 2014 மக்களவைத் தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது அந்த ஆட்சி காலத்தில் பிரதமராக நரேந்திர மோடி பதவியில் அமர்த்தபட்டார் அதற்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இவர்களது ஆட்சி இந்தியாவில் கொடிகட்டி பறக்கப்படுகிறது.இதனை அடுத்து மூன்றாவது முறையாக மீண்டும் பாஜக தனது ஆட்சியை பிடிப்பதற்கான பல யுக்திகளையும் மக்களை கவரும் பல நலத்திட்டங்களையும் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் எடுத்து வருகிறது, மேலும் பொருளாதாரத்தில் பல வருடங்களாக பின் தங்கி இருந்த இந்தியாவை தற்போது முன்னிலைப்படுத்தி உள்ளது டிஜிட்டல் இந்தியாவில் உலக நாடுகள் எட்டி உள்ள உயரத்தை விட மேலும் உயரத்தை இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வர வைத்துள்ளது இந்த பாரதிய ஜனதா அரசு! இப்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியும் அந்த வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொண்டு வருவதும் பல வழிகளில் சுய தொழில் ஆரம்பிக்க உள்ளதும் ஆரம்பித்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் உள்ள அரசியல் வேறு விதமாக மாறி வருகிறது அந்த மாற்றங்கள் அனைத்தும் பாஜகவிற்கு சாதகமான மாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கூட முன்பில்லாத வகையிலான வளர்ச்சியை பாஜக தற்போது கண்டுள்ளது அதனால் தமிழகத்தில் பிரதான ஆட்சியை புரிந்து வந்த திமுகவும் அதிமுகவும் பாஜகவின் வளர்ச்சியை கண்டு திணறிப் போய் உள்ளது, பல பிரபலங்களும் பல கட்சியினரும் பாஜக பக்கம் திரும்பி வருகிறார்கள் முக்கியமாக திரை பிரபலங்கள் பலர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி முன்னேற்றத்திற்கான ஆட்சி நாட்டின் வளர்ச்சிக்கான காலம் என கூறி அவர்களும் தற்போது பாஜகவில் இணைந்து மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கேரள மாநிலம் திருச்சூரில் நடிகர் சுரேஷ்கோபி பாஜக சார்பாக போட்டியிடுகிறார் இதனை அடுத்து தேர்தல் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருச்சூரில் உள்ள பாவரெட்டி பகுதியில் ரோட் சோவில் பங்கேற்றார்.

அப்பொழுது அந்த பகுதியின் அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்து பாங்கு ஒலிக்கப்பட்டுள்ளது உடனே தனது ரோட் சோவை பாங்கு முடியும் வரை நிறுத்திவிட்டு பாங்கு ஒலித்து முடிந்த பிறகு தனது ரோட் ஷோவை தொடங்கியுள்ளார் சுரேஷ்கோபி! இந்த செயலை இவர் மட்டும் இன்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனது நடை பயணத்தின் பொழுது பின்பற்றி உள்ளார். அதுமட்டுமின்றி நாட்டில் உள்ள பல கட்சிகள் தனது பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர வேண்டும் என பொதுமக்களுக்கு சம்பளம் பேசியும் உண்ண பிரியாணி மற்றும் மதுபானங்களை வழங்கியும் அழைக்கிறார்கள் ஆனால் பாஜகவில் உள்ள தொண்டர்களும் பாஜகவில் உள்ள தலைவர்களை பார்ப்பதற்கு பொதுமக்களோ இதுபோன்ற எதையும் எதிர்பார்க்காமல் தன் வீட்டிலிருந்து உணவு சமைத்துக் கொண்டு திருவிழா அல்லது பூங்காவிற்கு செல்வது போல் உணவை காட்டி எடுத்துக் கொண்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார்கள். இதன் மூலம் வழக்கமான ஒரு அரசியலை தாண்டி பாஜக ஒரு நேர்மையான மற்றும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அரசியலை செய்து வருகிறது எனவும் இணையத்தில் விமர்சனம் செய்யப்படுகிறது...