தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த முதல் நாள் முதலே திருவிழா போல கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தனது வேட்பாளர்களை அறிவித்தது. இதில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இந்த வேட்பாளர்களில் 11 பேரை புது முகங்களாக அறிமுகம் செய்துள்ளது. அதேபால் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 16 பேரை அறிமுகம் செய்துள்ளது. அதில் 15 பேர் புது முகமாகவே உள்ளது.
இந்தநிலையில் திமுங்க மற்றும் அதிமுக இரு கட்சிகளும் இதுவரை அதிமுக வெளியிட்ட 16 தொகுதிகள் வரை நேருக்கு நேராக இரு கட்சிகளும் ஒன்பது இடத்தில் நேரடியாக மோதி கொள்கின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்தை எதிர்த்து அதிமுகவின் ராஜசேகர் களம் இறங்குகிறார். அரக்கோண தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை எதிர்த்து அதிமுக தரப்பில் ஏ.எல் விஜயன் போட்டி போடவுள்ளார். ஆரணி தொகுதியில் திமுக சார்பாக தரணிவேந்தனை எதிர்த்து அதிமுக சார்பாக கஜேந்திரன் போட்டியிடவுள்ளார்.
சேலத்தில் திமுக சார்பாக செல்வகணபதியை எதிர்த்து, அதிமுக தரப்பில் இளைஞர் விக்னேஷ் போட்டியிடவுள்ளார். நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் சூரிய மூர்த்திக்கு எதிராக அதிமுகவில் இருந்து தமிழ்மணி போட்டியிடுகிறார். ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை எதிர்த்து அதிமுகவின் ஆற்றல் அசோக்குமார் களம் இறங்குகிறார். தேனி தொகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ் செல்வனை எதிர்த்து அதிமுக சார்பாக நாராயணசாமி போட்டியிடுகிறார்.
மேலும், வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீரசாமியை எதிர்த்து அதிமுக தரப்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். தென் சென்னை தொகுதியில் திமுக சார்பாக மீண்டும் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனன் போட்டியிடுகிறார். கடந்த தேத்தலில் இருவரும் மோதிக்கொண்ட நிலையில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தல் மும்முனை போட்டியாக திமுக, பாஜக, அதிமுக இருப்பதால் தேர்தலில் ஓட்டுகள் பிரியும் என்பதில் மாற்றமில்லை. தேர்தல் களமே பரபரப்பாக தொடங்கியுள்ளது. இதுவரை பாஜக வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் தென் சென்னயில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என்றும் சில தகவல் வந்துள்ளது. அதிமுக நாள் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பதால் இன்னும் நேருக்கு நேர் மோதிக்குள்ளும் தொகுதி அதிகரிக்கும் என்று கூறபடுகிறது. வரும் நாட்களில் பாஜக தனது வேட்பாளர்களை அறிவிக்கும்போது மும்முனை போட்டிக்கு பஞ்சமில்லை என்று தெரிகிறது.