24 special

அப்போ சூர்யா வந்தது கேப்டனுக்காக இல்லையா....

surya, vijayakanth
surya, vijayakanth

2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தது. ஆனால் திமுக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடர்ச்சியாக பல சரிவுகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தெருக்களில் இறங்கி மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தங்கள் உரிமைகளை கேட்டும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் வழக்குகளும் அவர்கள் மீது அமலாக்க துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் சோதனை என்பதும் திமுக அமைச்சரவையில் ஊழல் தன்மையை வெளிக்காட்டியது இந்த விவகாரத்தில் திமுக அமைச்சரவையை சேர்ந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் சிக்கி செந்தில் பாலாஜி சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் அதே சமயத்தில் பொன்முடியும் சிறை தண்டனைக்காக தயாராக உள்ளார். 


இதற்கிடையில் தமிழகத்தில் ஆங்காங்கே சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் தீவிரமடைந்துள்ளது. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக நடிகர்கள் மற்றும் நடிகைகள் சமூகத்தில் நடந்த சிறு அவலங்களுக்கும் உடனடியாக தட்டி கேட்டு எதிர் குரலை முன்வைத்தனர் தற்பொழுது திமுக ஆட்சியில் திமுக தான் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை சமூகப் பிரச்சினையை தீர்க்கவில்லை! இதனால் பெரும் துயரங்களை சந்தித்து வரும் மக்களுக்கு ஆதரவாக அதிமுக ஆட்சிக் காலத்தில் என்ற ஒரு நடிகர்கள் கூட  திமுகவிற்கு எதிராக நிற்கவில்லை என்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் நடிகர் சிவகுமாரின் குடும்பம் என்பது அதிக அளவிலான விமர்சனங்களை பெற்று வருகிறது. தன் படத்தின் மூலம் கடந்த ஆட்சியில் கடுமையாக விமர்சனம் செய்த நடிகர் சூர்யா! நீட் எதிர்ப்பை பெருமளவில் கையெடுத்த நடிகர் சூர்யா! இப்பொழுது விவசாய மக்கள் தண்ணீர் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போது எங்கு சென்றார்கள் என்ற பல விமர்சனங்களுக்கு சூர்யா குடும்பம் வித்திட்டது. 

இந்த நிலையில் தொடர்ச்சியாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் இவ்வுலகை விட்டு பிரிந்தார் இதனால் திரையுலகம் முழுவதுமே பெரும் சோகத்தில் மூழ்கியது தமிழக மக்கள் பலரும் தங்களது வேதனைகளை கண்ணீரால் தெரிவித்தனர். ஆனால் அந்த சமயத்தில் நடிகர் சூர்யா கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா திரை உலகில் காலடி எடுத்து வைத்த பிறகு தொடர் ஏழு படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை! அதற்கு பிறகு பெரியண்ணா படத்தின் மூலம் மக்களின் வரவேற்பை பெற்றார் அதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த்!  அப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடத்து மக்களின் ஆதரவை சூர்யாவிற்கு பெற்றுக் கொடுத்தார். 

இப்படி திரை வாழ்க்கையில் மிகவும் உதவிகரமாக இருந்த கேப்டனின் இறுதி சடங்கில் சூர்யாவும் அவரது குடும்பமும் கலந்து கொள்ளாமல் நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்து கொண்டு கேப்டனின் மறைவு பெரும் வருத்தமளிக்கிறது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டது பல விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் நேற்று நடிகர் சூர்யா சென்னை திரும்பி உள்ளது திமுகவின் நிகழ்ச்சிக்காக என்பது தெரிய வந்துள்ளது இது குறித்து  பிரபல யூட்யூப்பர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் வலையதளபக்கத்தில் 'புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து சென்னை திரும்பினார் சூர்யா. அடுத்து கலைஞர் 100 விழாவில் பங்கேற்பு' என பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.