தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக என்பது இரு பெரும் கட்சியாக மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகவும் இதை மாற்ற யாரும் வரப்போவதில்லை என்ற ஒரு திண்ணகத்திலும் திமுக மற்றும் அதிமுக இருந்து வந்தது. ஆனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல்களையும், அதன் முடிவுகளையும் பார்க்கும் பொழுது அதிமுக மற்றும் திமுகவிற்கு நிகரான மற்றும் அதிரடி போட்டியாக பாஜக தனி கட்சியாக உருவெடுத்துள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது. முன்னதாக பாஜகவின் மாநில தலைமை அண்ணாமலையின் பொறுப்பில் வந்த பிறகு பாஜகவின் நடவடிக்கைகள் மற்றும் செயல் பாடுகள் அனைத்துமே மாறியதோடு பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. இதன் தொடர்ச்சியாக என் மண் என் மக்கள் என்ற ஒரு தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணத்தை மேற்கொண்ட அண்ணாமலைக்கு பாஜகவின் தொண்டர்கள் மட்டுமின்றி பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் அதிக வரவேற்பை கொடுத்தனர்.
அதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன்பாக பாஜகவின் மிக முக்கிய அமைச்சர்கள் அனைவரும் தமிழகத்திற்கு வருகை புரிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு ரோட் சோவிலும் கலந்து கொண்டனர். அவற்றிற்கும் தமிழக மக்களிடமிருந்து பேராதரவு கிடைத்ததை சமூக வலைதளங்களில் உலா வந்த வீடியோக்கள் மூலம் புலப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தலில் முடிவுகளில் பாருங்கள் நாங்கள் வளர்ந்து விட்டோமா அல்லது நீங்கள் தேடும் கட்சியாக இருக்கிறோமா என நேருக்கு நேராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்டிருந்தார். இதற்கிடையில் அதிமுக - பாஜக விற்க இடையே இருந்த உரசல் காரணமாக அதிமுக பாஜகவின் கூட்டணியை முறித்துக் கொள்ள, அதிமுக லோக்சபா தேர்தலை பெரும்பான்மையாக நம்பி இருந்தது. அதே சமயத்தில் பாஜகவின் கூட்டணியில் இருந்த விலகியதால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் அனைத்தும் தனக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி போட்ட கணக்கும் தவறுதலாக மாறி, அதிமுகவின் ஓட்டு வாங்கியையே குறைத்துவிட்டது.
விருதுநகர் தொகுதியை தவிர அதிமுகவிற்கு ஒரு வலுவான போட்டியாக எந்த தொகுதியும் அமையவில்லை. கிட்டத்தட்ட 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் கன்னியாகுமரி தொகுதியில் நான்காம் இடத்திற்கும் சென்று சில தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து அதிமுக பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஆனால் முதல்முறையாக தமிழகத்தை தனி கட்சியாக தனது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பாஜக 12 தொகுதிகளில் இரண்டாம் இடத்தில் இருந்ததோடு தனது வாக்கு சதவீதத்தையும் அதிகரித்தது. இதன் மூலம் அதிமுகவின் பெரும்பாலான ஓட்டுகள் பாஜகவிற்கு சென்றுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதே சமயத்தில் தமிழகத்தில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும், ஓட்டு சதவீதத்தில் குறைந்துள்ளது. அதாவது 2019 இல் திமுக கூட்டணியில் 23 இடங்களில் களம் கண்ட திமுக 32.76 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றது. ஆனால் நடந்து முடிந்த 2024 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணியில் 22 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்கிய திமுக 26.71 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது.
அதோ போன்று கடந்த 2019 தேர்தலில் அதிமுகவின் கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் களம் இறக்கப்பட்ட பாஜக 3.66 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்ற நிலையில், இந்த முறை 23 தொகுதிகளில் களம் கண்டு 11. 12 சதவீத ஓட்டுகளை தன்வசப்படுத்தியுள்ளது. இப்படி தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சியாக திகழ்ந்து வந்த திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு குறைத்து ஒரு தனிப் பெரும் கட்சியாக பாஜாக உருவெடுத்து வருகிறதை 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் மூலம் காணலாம் எனவும் இந்த தேர்தலில் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் அனைத்தும் பாஜக வசமாக மாறி உள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.மேலும் அதிகமான இந்த வாக்கு சதவிகித்தை இன்னும் அதிகப்படுத்தவேண்டும் என அண்ணாமலை கமலாலயத்தில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் சில தகவல்கள் கசிகின்றன...