திருமுருகன் காந்தி பெயர் இருக்கும்போதே சந்தேகம் எழுந்த நிலையில் ஊடகங்கள் சேர்ந்து செய்தது அம்பலம் !தமிழகத்தைசேர்ந்த தீவிர பாஜக எதிர்ப்பு சித்தாந்தம் கொண்ட ஊடகங்கள் ஒரு செய்தியை பெரிது படுத்தினர்.. சிறப்பு விவாதங்களும் நடைபெற்றது, குறிப்பாக இந்தியாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், போராட்டக்காரர்கள் என பலரை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த செயலி மூலம் உளவு பார்த்ததாகவும், இதில் மத்திய பாஜக அரசிற்கு தொடர்பு இருப்பதாக தி வயர் என்ற இணையதளம் செய்தி வெளியிட அதை முன்னணி ஊடகங்கள் எந்த வித ஆதாரமும் இல்லாமல்செய்தியாக வெளியிட்டன
குறிப்பாக தி வயர் இணையதளம் உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவரை இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக போலி செய்தி வெளியிட்டு சிக்கியது, அந்த இணையதளம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது ,இப்படி இருக்கையில் போலி செய்தியை வெளியிடும் இணையதளம் வெளியிட்ட ஆதரமில்லாத செய்தியை முன்னணி ஊடகங்கள் செய்தியாகவும் விவாதமாகவும் நடத்தியதில் இதன் பின்னணியில் என்ன உள்ளது என்ற கேள்வி எழுந்தது.அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி தொலைபேசி எண் அந்த பட்டியலில் இருந்த போதே பலத்த சந்தேகம் ஏற்பட்டது, திருமுருகன் காந்தியை பற்றிய ரகசியங்களை அறிய பல கோடி செலவு செய்து மத்திய அரசு நேரத்தை வீணடிக்க வாய்ப்பே இல்லை என தமிழக பாஜகவினர் அழுத்தமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் உலக அளவில் ஆய்வை செய்ததாக கூறப்பட்ட அம்னெஸ்டி அமைப்பு திடீர் பல்டி அடித்துள்ளது, அதில் நாங்கள் வெளியிட்டதாக பல்வேறு ஊடகங்களில் பல்வேறு பெயர்கள் வெளியாவது எங்களுக்கு தொடர்பில்லை என்றும், பட்டியலில் வெளியான நபர்களை உளவு பார்த்ததாக எங்கும் உறுதியாக அந்த அமைப்பு கூறாமல் பல்டி அடித்துள்ளது.இந்த ஆய்வை மேற்கொண்டதாக கூறப்பட்ட அம்னெஸ்டி அமைப்பு இந்தியாவில் பணவர்த்தனைகளில் பிராடு செய்ததாக இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு நிறுவனம் என்பதும் அந்த போலி நிறுவனம் நடத்திய ஆய்வை ,ஒரு போலி செய்திக்கு பெயர் போன வயர் இணையதளம் வெளியிட்ட ஆதரமில்லாத செய்தியை ஊடகங்கள் பெரிது படுத்தியத்தில் இருந்து , கரோணா தடுப்பூசி தயாரித்து உலகில் அதிக மக்களுக்கு செலுத்தி உயிரை காப்பாற்றிய மத்திய பாஜக அரசின் செயல்பாடு நாடாளுமன்ற விவாதம் மூலம் மேலும் உலக நாடுகளுக்கு தெரியாமல் இருக்க செய்த சதி செயலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
திருமுருகன் காந்தியை பலகோடி செலவு செய்து உளவு பார்க்க மத்திய அரசிற்கு வேறு வேலை இல்லையா ? மக்களை திசை திருப்பும் செயல்களை தமிழக ஊடகங்கள் இனியாவது மாற்றி கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது