24 special

தேவையில்லாத வீடியோவால் சிக்கிய TTF வாசன்!

ttf vasan,youtupe
ttf vasan,youtupe

Youtube சேனல் ஒன்றில் பைக் ரேஸ் மற்றும் நீண்ட தூரம் இருசக்கர பயணங்களை மேற்கொண்ட வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் TTF வாசன். இவரது youtube சேனல் பக்கம் பார்த்தால் பெரும்பாலும் பைக் மோகம் கொண்டவர்களும் இளைஞர்களும் அதிக அளவில் இவரை பாலோ செய்து வந்தனர். அதோடு இவர் தனது நீண்ட பயணத்தின் பொழுது லைவ் வந்தும் பலருக்கு உதவி செய்வது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார். இப்படி இருந்த நிலையில் திடீரென்று இவரது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஒரு மாபெரும் கூட்டம் கூடியது, அதாவது ஒரு நடிகருக்கு எவ்வளவு கூட்டம் கூடிமோ அதேபோன்று கூட்டம் இவரது பிறந்தநாளுக்கு இவரை காணக்கூடியது TTF வாசனை மீடியாவில் அறிமுகப்படுத்தியது. இதனை அடுத்து கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று வீலிங் செய்ய முயற்சித்த பொழுது டிடிஎஃப் வாசன் தடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிவு ஏற்பட்டது. அதனை அடுத்து அவரது இருசக்கர வாகனமும் இந்த விபத்தில் நொறுங்கியது! 


இதனால் அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் என கிட்டத்தட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதனை அடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர் படுத்தப்பட்டதை அடுத்து 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து டிடிஎஃப் வாசன் தரப்பு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது அதனை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது அந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவி கார்த்திகேயன் இளைஞர்களை தூண்டும் வகையில் மனுதாரர் செய்யப்பட்டதால் அவர் தனது youtube தளத்தை மூடி விட்டு பைக்கையும் எரித்து விட்டு வரும்படியும் கூறியது இணையங்கள் முழுவதிலும் வைரலானது. இதனை அடுத்து அவரது ஜாமீன் மனு பரிசீலிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக காவல் நிலையத்தில் கையெழுத்திடும் படியும் உத்தரவிடப்பட்டது. அதனால் இன்றளவும் டிடிஎஃப் வாசனின் வழக்கு விசாரணையில் இருந்து வருகிற நிலையில் டிடிஎஃப் பார்சல் குறித்த மற்றுமொரு வீடியோ தற்போதைய இணையத்தில் வைரல் ஆகியுள்ளது! 

அந்த வீடியோவில் டிடிஎஃப்பின் மணி என்ன ஆயிற்று என்றால் மாலை 7 மணி! என்றும்! பீச் ஓரத்தில் ஒரு பெண்ணின் மடியில் தலை சாய்த்து கொண்டு "பரவாயில்ல கடவுள் ரொம்ப துன்பத்தை போன வருஷம் கொடுத்துட்டு இந்த வருஷம் ரொம்ப இன்பத்த கொடுக்கிறார்!" என்று பேசி உள்ளார். இது இணையத்தில் தற்போது விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் கடும் கண்டனத்திற்கும் வருங்கால இளைஞர்கள் மனதில் ஒரு தவறான எண்ணத்தை விதைக்கும் வகையில் TTF வாசன் செயல்பட்டு வருகிறார் என்றும் அதனால் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தை தாண்டி இமாச்சலப் பிரதேசத்திலும் இவர் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்கு வழக்கு பதிவு பட்டுள்ளது. இப்படி நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டு வரும் TTF வாசன் தற்போது ஒரு பெண்ணின் மடியில் உல்லாசமாக இருப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.