சமீப மாதமாக வெளியாகும் சினிமா படங்கள் அனைத்தும் ஏற்கனவே வந்த கதைகளை கொண்ட படமாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும், முன்னணி நடிகர்களின் படம் வந்தால் இரண்டரை மணி நேரம் உட்க்கார்ந்து பார்த்து வெளியில் வந்து அப்படத்தில் ஒன்னும் இல்லை குப்பை தான் காசு வேஸ்ட் எல்லாம் சொல்லி புலம்பி வருகின்றனர். திரையரங்கு உரிமையாளரோ பாத்து படமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படம் வந்தாலும் யோசித்து முடிவு எடுக்க வேண்டிய நிலைமைக்கு செல்வதாக கூறுகின்றனர்.
புதிய படம் எது வெளியானாலும் முன்னாடியெல்லாம் குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்த்து வருவது வழக்கம். நாளடைவில் டெக்னாலஜி வளர முதல் நாள் முதல் ஷோ தியேட்டரில் வெளியானதும் இணையத்தில் வந்துவிடும் இதனால் தியேட்டர்களுக்கு மக்கள் குறைவாக சென்றனர். கடந்த காலத்தில் ஒரு படம் வெளியானால் குறைந்தது 50 நாட்களுக்கு மேல் ஓடும். இப்போ வெளிவரும் படங்கள் எல்லாம் ஒரு வாரம் ஓடுவது பெரியதாக பார்க்கப்படுகிறது.
பண்டிகை நாட்களில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படம் வெளியாகும்போது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு செல்வது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய படமாக ஏதும் அமையவில்லை. கடிசியாக் வெளியான லியோ படம் ஜெயிலர் போன்ற படங்கள் வெளியானது குடும்பத்துடன் பார்க்கலாம் என்று தியேட்டருக்கு சென்றால் அரை குறை ஆடையுடன் நடிகைகளை கொண்டு காட்சிகளை எடுத்து வருகின்றனர். லியோ படம் வெளியாகி பெரும் வரவேற்பு பெறக்கூடும் என நினைத்த போது மக்கள் கூட்டம் திரைக்கு வராததால் உரிமையாளர்கள் கரண்டு பில் கட்ட கூட காசு இல்லை இந்த படத்தை எதற்காக எடுத்தோம் என மனவேதனையில் இருப்பதாக சில தகவல் வந்தன.
விஜய், ரஜினிகாந்த் போன்றவர்கள் படமே இந்த லட்சணத்தில் இருந்தால் எப்படி எங்களது பொழப்பு நடத்துவது என கூறி வந்த நிலையில். சில மாவட்டங்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் பழைய படங்களை மீண்டும் வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தான் வாரணம் ஆயிரம் படத்தி ரீ-ரிலீஸ் செய்து பல ஆயிரம் லாபம் ஈட்டியதாக வெளிப்படையாக கூறினர். தொடர்ந்து, மூன்று மயக்கம் என்ன மற்றும் சிவா மனசுல சக்தி போன்ற படங்களை வெளியிட்டு கல்லா கட்ட ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளத்தில் 2015 ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தையும் அடுத்த வாரம் தமிழ் மீண்டும் வெளியிட முடுவெடுத்துள்ளனர். இந்நிலையில், பிரபல திரை விமர்சகர் எப்போதும் ஒரு படம் வெளியானாலே கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் அடுத்த நாளே அந்த படத்திற்கான வெற்றி விழாவை கொண்டாடுவார்கள் ஆனால், பொங்கலுக்கு வெளியான அயலான், கேப்டன் மில்லர் படத்திற்கு என் வெற்றி விழா கொண்டாடவில்லை என விமர்சனத்தை முன் வைத்தார். இதற்கு ரசிகர்களோ படம் பெரியதாக பேசப்படவில்லை அதனால் தான். பாதி திரையரங்கில் மக்கள் கூட்டம் இல்லை என கூறுகின்றனர். தியேட்டர் உரிமையாளர் முன்னணி நடிகர்களை விட்டு புதுமுக நடிகர்கள் படம் எடுத்து ஒட்டினாலே லாபம் என்ற நிலைமைக்கு வந்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் சிலர் கூறுகின்றனர்.