24 special

பத்திரிக்கையாளர் ஆ.ராசா பற்றி கூறிய உண்மை இணையத்தில் வைரல்!

a.raja,kanimozhi
a.raja,kanimozhi


கடந்த முறை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த பொழுது தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதனால் 1.76 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை சுட்டிக்காட்டியது. இதனை அடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இந்த ஊழல் வழக்கு விசாரித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்போம் வழங்கியது, அந்த தீர்ப்பில் அப்போதைய மத்திய அமைச்சர்களாக இருந்த ஆ ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் 2018 இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு விசாரணையை நாள்தோறும் ஆறு நீதிபதிகள் தலைமையிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா தொற்றுக்காலத்தில் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து 2020 ஆம் ஆண்டில் நீதிபதி பிர்ஜேஷ் சேத்தி இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் தொடர்ந்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியே அவர் ஓய்வு பெற்றதால் அதற்குப் பிறகு ஆஷா மேனன் உள்ளிட்ட பல நீதிபதிகள் இந்த விசாரணை நடத்தி வந்தனர். இப்படி தொடர்ச்சியாக இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு தொடர் விசாரணையில் இருந்து வருகிறது மேலும் 2 ஜி முறை கேட்டு வழக்கில் அமைச்சர் ஆ ராசா மற்றும் கனிமொழி ஆகிய இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பும் தற்போது அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. 


அதுமட்டுமின்றி 2021 தமிழகத்தில் ஆட்சி அமைத்த திமுக ஆ ராசாவிற்கு இடம் கொடுத்து தற்போது நீலகிரி மாவட்டத்தின் எம்பி ஆக வலம் வருகிறார் ஆராசா! ஆனால் அங்கும் தன் பொறுப்பை சரிவர நிகழ்த்தாமல் வந்த ஆராசாவிற்கு நீலகிரி தொகுதியில் அவருக்கு எதிரான சூழ்நிலையே நிலவுவதாக கூறப்படுகிறது சமீபத்தில் அவர் தொகுதிக்கு சென்ற பொழுது கூட அங்கு அவருக்கு அதிருப்திகள் மற்றும் மக்கள் அவரை நோக்கி பல கோரிக்கைகளை முன்வைத்து ஏன் இதுவரை இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது, இது அனைத்தும் நீலகிரியில் அடுத்த முறை ஆராசா நின்றால்  நிச்சயமாக தோல்வியை தழுவுவார் என்பதற்கான அதிருப்திகள் நிலவி வருகிறது. 

மேலும் கடந்த முறை நீலகிரி தொகுதிக்கு சென்ற பொழுது விரட்டி அடிக்கப்படுவோம் அதனால் மீண்டும் நீலகிரி தொகுதியில் போட்டியிட வேண்டாம் அதுவும் தற்பொழுது தலைமை வேறு எந்த தொகுதியில் நின்று போட்டியிடுவீர்களோ அதில் வெற்றி தோல்வி அங்கு நிற்கும் வேட்பாளர்களையே சாரும் என்று கூறியுள்ளது அதனால் நாம் நீலகிரி தொகுதியை விட்டு வேறு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு ஆராசா தற்போது வந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் எம் பி ஆர் ராசா பற்றி கூறிய கருத்துக்கள் தற்பொழுது வைரலாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சி பெட்டியில் பேசிய மூத்த அரசியல் விமர்சகர் கூறும்போது, 'அகதியாக வந்தவர் நம்ம 2ஜி ராசா, இன்று அவர் உலக அழகிகளை கோவாவிற்கு வரவைத்து உல்லாசமாக உள்ளார்! அதோடு இந்த திராவிடருக்கும் தமிழகத்தில் ஊழல் பண்ணுவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது! என்று பரபரப்பான தகவலை கூறியதோடு திமுகவில் அறிவு திறமைக்கு வேளையே இல்லை எவ்வளவு பணத்தை கொடுப்ப என்பது மட்டுமே அங்கு முக்கிய கருத்தாக உள்ளது' என்று அரசியல் விமர்சகர் கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.