24 special

காதலியுடன் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் TTF..? சீசன் 8ல் கலந்து கொள்ளும் முக்கிய பிரபலம்..!

TTF Vasan, Biggboss
TTF Vasan, Biggboss

விதவிதமான உயர் ரக இரு சக்கர வாகனத்தை ஒட்டி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் டிடிஎப் வாசன். எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளாரோ அந்த அளவுக்கு வெறுப்பையும் சம்பாதித்துள்ளார். இளம் தலைமுறைகளை தவறான பாதைக்கு வாசன் கொண்டு செல்வதாக அவர் மீது ஒரு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாசனை 100 நாட்கள் சிறையில் வைக்க பிரபல தொலைக்காட்சி நிறுவனம் முன்வந்துள்ளதாம். 


கடந்த வருடம் பைக் ஓட்டி விபத்துக்குள்ளானதில் அவரை சிறையில் அடைத்தனர்,  அவர் மீது வழக்கு தொடரப்பட்டு லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும் டிடிஎப் வாசன் தனது சேட்டையை நிறுத்துவதாக இல்லை கடந்த மாதம் காரில் செல்லும்போது போன் பேசிக்கொண்டு சென்றது சர்ச்சையாக மாறியது இதனால் அவரை கைது செய்த போலீசார் நிபந்தனை ஜாமின் வழங்கியது. சில நாட்கள் சிறைவாசம் சென்று வந்த டிடிஎஃப் வாசனை ஒரேயடியாக 100 நாட்களுக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் சிறைபிடிக்க விஜய் டிவி தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக  ஐ.பி,எல் ஒரு பக்கம் இருந்து வருகிறது என்றால் இன்னொரு பக்கம் பிக்பாஸ். தமிழ், இந்தி , தெலுங்கு , கன்னடம் என எல்லா மொழிகளிலும் ஹிட் அடித்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். தமிழைப் பொறுத்தவரை இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் இன்று சினிமாவில் கலக்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் மக்களுக்கு முன்னதாகவே தெரிந்தவர்களாகவே தான் இருப்பார்கள். இன்ஸ்டா, போன்ற சமூக ஊடகத்தில் பிரபலமானவர்களும் ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயத்தில் ஈடுபட்டவர்களை தான் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுவரை நடந்த ஏழு சீஸனும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில். பிக் பாஸ் 8வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த ஆண்டு டி.டி.எஃப் வாசன் மற்றும் அவரது காதலி ஷாலின் ஸோயா ஆகிய இருவரையும் போட்டியாளர்களாக கலந்துகொள்ள விஜய் தொலைக்காட்சி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே, வாசனின் காதலியான ஷாலின் ஸோயா விஜய் தொலைககாட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி சீசன் 5ல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் டிடிஎஃப் வாசன் மற்றும் ஷாலின் ஜோயா இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடக்கும் இதில் வாசன் தாக்கு பிடிப்பாரா முதலில் வீட்டிற்கு போவாரா என பொறுத்திருந்து பார்ப்போம். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் ஏழாவது சீசனில் பிரதீப்பை வேன்டுமென்றே ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை ரசிகர்களிடையே கோவத்தை ஏற்படுத்தி அந்த தாக்கம் இறுதிவரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.