தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டமான காட்சிகளை அமைத்து படம் எடுக்கும் இயக்குனர் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது இயக்குனர் சங்கர் தான்!! அவரின் திரைப்படங்கள் அனைத்துமே ஒரு தனிப்பட்ட கதைக்களமும், ஸ்டைலும் இருக்கும். இவரின் திரைப்படங்கள் அனைத்துமே அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு எப்போதுமே இருக்கும் என்பது உறுதி!! இவரைத் தொடர்ந்து தற்பொழுது இவரின் குடும்பத்தில் உள்ள மற்றொருவரும் சினிமா துறையில் நுழைந்துள்ளார்!! அது வேற யாரும் இல்லை இவரின் மகள் அதிதி தான்!!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக முதல் படத்திலேயே பிரபல நடிகர் ஆன கார்த்தியுடன் சேர்ந்து விரும்பன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இவருக்கு நடிப்பில் மட்டும் தான் ஆர்வம் இருக்கிறது என்று பார்த்தால் பாட்டு பாடுவது, மாடலிங் செய்வது போன்ற பிற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து இவரின் முதல் திரைப்படமான விரும்பன் படத்திலேயே மதுர வீரன் அழகுல!! மாட்டு கொம்பு திமிருல பாவி நெஞ்சு சிக்கிக்கிிருச்சே!! என்ற பாடலை பாடியிருந்தார். இவரின் குரல் ஆனது அந்தப் பாட்டிற்கு எடுப்பாக இல்லாவிட்டாலும் கூட இயக்குனர் சங்கரின் மகள் என்பதால் யாரும் எதிர்த்து கேட்காமல் அந்த பாடலை திரைப்படத்தில் வைத்து அதற்கு மேலோட்டமாக தற்போது உள்ள டெக்னாலஜிகளை பயன்படுத்தி பாடலை சரி செய்து விட்டனர்.
இதை தொடர்ச்சியாக தர்மம் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அதித்தி ஷங்கர் இரண்டாவது திரைப்படம் ஆக மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக அமைந்திருந்தது. முதலில் விரும்பும் திரைப்படத்தில் பாட்டு பாடியதை போலவே இந்த திரைப்படத்திலும் பாட்டு பாட வேண்டும் என்று அதிதி ஆசைப்பட்டு உள்ளார். இதன் தொடர்ச்சியாக மாவீரன் திரைப்படத்திலும் வண்ணாரப்பேட்டையில ஒரு வவ்வாலு ஏறிருச்சா!! என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடலுக்கு டெக்னாலஜிகளை பயன்படுத்தி குரலினை சரி செய்து விட்டனர்.
இவ்வாறு தொடர்ந்து அவர் நடிக்கும் திரைப்படங்களில் அமைந்திருக்கும் பாடல்களை பாடி வந்த அதிதி சங்கரை சினிமா பார்ப்பவர்கள் அனைவரும் கலாய்த்து வந்தனர். அது மட்டுமல்லாமல் திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதிதி சங்கர் மேடைகளிலும் இதுபோல பாட்டு பாடுவதே தொடர்ந்து வந்தார். இவ்வாறு இவர் தொடர்ந்து இப்படி செய்து கொண்டிருக்க அடுத்த சித்ராதேவி பிரியா இவர்தான் என்று இணையதளங்களில் பலரும் கமெண்ட்களை தெளித்து வந்தனர். இருந்தாலும் கூட அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத அதிதீ ஷங்கர் தற்போது மீண்டும் ஒரு காமெடியை செய்து வைத்துள்ளார்.
தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வேலைகள் நடந்து கொண்டுள்ளது. அதற்கான ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் போது ஆதிதி சங்கர் பாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அதிதி சங்கர் பாடியதை பார்க்கும் பொழுது எல்லோரும் இதெல்லாம் ஒரு குரலா என்று அனைவரும் நினைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இத்தனை நாட்களாக இரண்டு சினிமா பாடல்களை பாடி அதில் டெக்னாலஜிகளை பயன்படுத்தி பாடலை நன்றாக இருக்கும் படி செய்து வந்தனர்.
ஆனால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் ஆடியோ லான்ச்ல் இவர் பாடிய பாடலை ரியலாக கேட்கும் பொழுது இவரை உண்மையான குரல் என்ன என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பலரும் அந்த வீடியோவை வைத்து கலாய்த்து வருவதை தொடர்ந்து மேலும் ஒருவர் தனது இணையதள பக்கத்தில் என்ன ஒரு கருமாந்திர வாய்ஸ் எனக்கூறி வீடியோவை பதிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது!! அவ்வளவு பெரிய இயக்குனரின் மகள் ஏன் இப்படி செய்கிறார் எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது...