பழைய மதுரை ஆதினம் என நினைத்து கேள்வி கேட்க சென்றவர்கள் தற்போது புதிய மதுரை ஆதினத்தின் செயல்பாடுகளால் மிரண்டு போயிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும் குறிப்பாக மதுரை ஆதினம் வெளிப்படையாக கொடுத்த பதில்களால் பேட்டி எடுத்த நெறியாளர் அசோகா சற்று மிரண்டு போயிதான் இருந்தார் என்றே சொல்லவேண்டும். மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதீன மடம் உள்ளது.மதுரை ஆதீனத்தின் 293 -ஆவது சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பட்டம் ஏற்கும் ஞானபீடாரோஹன விழா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெறுகிறது.
மதுரை ஆதீனத்தின் 292 -ஆவது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார். இதனையடுத்து தருமை ஆதீன சுவாமிகள், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமான ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகளுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை ஆதினம் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார், அதில் மத சார்பற்ற நாட்டில் ஏன் கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவேண்டும் மற்ற மதங்களை போல எங்கள் சமயத்தையும் எங்களிடம் விட்டு விடுங்கள் அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என கூறி அதிரடி காட்டினார்.
மேலும் என் சமூகம் குறித்து யார் பேசினாலும் அது எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் ஆணித்தரமாக எனது கருத்துக்களை வைப்பேன் என் காலத்தில் பல கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுள்ளேன், கம்யூனிஸ்ட்கள் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை மீட்டேன். என பல்வேறு கேள்விகளுக்கு ஆணித்தரமாகவும் நிதானமாகவும் பதில் அளித்தார் தற்போதைய மதுரை ஆதினம் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் பல்வேறு கேள்விகளுக்கு மதுரை ஆதினம் அளித்த பதில்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.