மாரிதாஸ் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நியூஸ்18 ஈமெயில் வழக்கில் ஆஜராகினார். முதலில் 2 மணி ஹியரிங் என்று தகவல் கொடுத்து விசாரணையை 12.30 ஆரம்பித்து 1.30 முடித்தனர். கூட்டம் கூடலாம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகலாம் என்பதால் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் ஏழு நாள் போலிஸ் கஷ்டடியில் மாரிதாஸ் எடுத்து விசாரிக்க ஆளும்தரப்பு கேட்டிருந்த நிலையில் அத்தனை நாட்கள் கொடுக்க முடியாது 24 மணிநேர மட்டுமே கொடுக்க முடியும் என காவல்துறை விசாரணைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
இன்று(20/12/21) மாலை 5 மணியில் இருந்து நாளை மாலை 5 மணிவரை போலிஸ் கஷ்டடி. பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த சூழலில் நீதிபதியின் அனுமதியோடு மாஸ்கை களட்டிய மாரிதாஸ் “ஒண்ணுமில்லாத இமெயில்க்கு ஒரு வருசம் அலைய வைக்கறாங்க,, ஒரு மெயில் எங்கிருந்து வந்தது, எங்கு உருவானது என்று தெரியவில்லையென்றால் எனது வழக்கறிஞர் அணியிடம் கேட்டு தெரிந்துகொள்ள சொல்லுங்கள்” என கருத்தை சுருக்கமாக வைத்தார்
முதல் ஹியரிங்கை விட இரண்டாம் ஹியரிங்கின் போது மாரிதாஸ் அதிக எனர்ஜியோடும் மனதைரியத்தோடும் காணப்பட்டார் இதில் தான் சொல்லவந்த கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்தார் மாரிதாஸ் எப்படியும் பொங்கல் வரை பல்வேறு வழக்குகளை காரணம் காட்டி இழுத்தடிக்க ஆளும் தரப்பு இன்னும் சில வழக்குகளோடு தயாராக இருப்பதாகவும்.
ஆனால் அவற்றை முறியடித்து விரைவில் மாரிதாஸ் விடுதலை செய்யப்படுவார் எனவும் மாரிதாஸ் தரப்பு கூறுகிறது மொத்தத்தில் வழக்கு மேல் வழக்கு என போட்டு காவல்துறை மூலம் ஆளும் தரப்பு மாரிதாஸை மிரட்ட நினைத்தால் மாரிதாஸ் எந்தவித சலனமும் இல்லாமல் ஆணி தரமாக அதே தொணியுடன் நீதிமன்றத்தில் பேசியது ஆளும் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.