பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தகுதி தேர்வு முடித்த (TET) ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளது. மீண்டும் பரபரப்பு தொடங்கியுள்ளது.கடந்த மாதம் மூன்று வகையான ஆசிரியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10 நாட்களுக்கும் மேல் நடந்த போராட்டம் அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை சுமுக உடன்பாடு எட்டியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக ஏற்கனவே போராட்டத்தை நடத்தியுள்ளனர்.இந்த நிலையில் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். அந்த வகையில் இன்று காலை 8.30 மணியளவில் டெட் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசினர்.
அமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் மறு தகுதி தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தான் வரும் ஜனவரி சுமார் 2 ஆயிரம் பணியிடங்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு போட்டித் தேர்வை மட்டுமே நடத்த வேண்டும் என்று தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும் அரசு சார்பில் தகுதித் தேர்வு கூடுதலாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை எல்லாம் முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து இன்று முதல் ஈரோட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி போராட்டம் நடத்தினர்.
அவர்களுடனும் அமைச்சர் நாளை பேச்சு வார்த்தை பேசுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது நாளை நடக்கவிருந்தது அந்த பேச்சுவார்த்தை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் தகுதி தேர்வு ஆசிரியர்களுடன் இடைநிலை ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. திமுக அரசு பொய் வாக்குறுதியை மக்களிடம் கொடுத்து ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றாத காரணத்தால் ஆசிரியர்கள் போராட்டத்தை கையில் எடுத்து வருகின்றனர். அரசும் அவர்களை காவல்துறை ஏவலை கொண்டு அராஜகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.