24 special

சின்ன தூசு பிரச்சனை.....இரு தரப்பு பிரச்சனையாக மாறியது எப்படி?

police, people
police, people

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினரும், 200க்கும் மேற்பட்ட மற்ற சமூக குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சோக்காடி கிராமத்தில் ஊர் பொதுவாக மாரியம்மன் கோவில் மறுசீர் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.  அதற்காக கோயிலின் அறுகே கிரானைட் கற்கலை பாளீஸ் செய்யும் பணியானது கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.


கிரானைட் கற்கல் பாளீஸ் செய்யும் போது அருகில் உள்ள வீடுகளில் தூசி பரவுவதால், வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு பட்டியலின சமுகத்தை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் மேற்பட்ட சமூக மக்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே இருதரப்பு மோதல் ஆரம்பமானது. இதனை கட்டுப்படுத்த சோக்காடி பகுதியை சேர்ந்த அதிமுகவின் ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயம் சோக்காடி ராஜனுக்கும், பட்டியலின சமுகத்தை சேர்ந்த மக்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சோக்காடி ராஜனை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் இருபிரிவினர் இடையே மோதல் அதிகரித்த நிலையில் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டும், பட்டியலின மக்களின் வீடுகளில் கற்கலை கொண்டு தாக்கியும், அங்கிருந்த ஓலைகளுக்கு தீவைத்தும் தகராரில் ஈடுபட்டனர்.

இதனால் சோக்காடி பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்பட்டது. இதனை அடுத்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையிலான ஏராளாமன போலீசார் சோக்காடி கிராமத்தில் குவிக்கபட்டு, இரு பிரிவினர் இடையேயும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரச்சனையை முடிவிக்கு கொண்டு வருவதற்காக மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சனையை தீர்க்க இருபிரிவினர் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்த நிலையில் ஒருபிரிவினர் பேச்சுவார்த்தைக்கு வராததால் மேலும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் 10 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக சோக்காடி கிராமத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பாய்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் போராட்டத்தை கையில் எடுத்து சாலை மறியலில் ஈடுபடுவதால், அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து இன்றும் அங்கு பாதுகாப்பாவுக்கு போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்க்கும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார். தற்போது தமிழ்க்கட்டத்தில் ஒரு சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் இருதரப்பு மோதலானது அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.