உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதியின் கடைசி திரைப்படம் என கூறிவந்த நிலையில் திமுக சட்ட அமைச்சர் தொடங்கி பல அமைச்சர்கள் உதயநிதி மீண்டும் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில் ஏன் உதயநிதி நடிக்க கூடாது அப்படி நடித்தால் என்ன நடக்கும் என நேரடியாக மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி கடந்த கால தரவுகளை அடிப்படையாக கொண்டு பதில் கொடுத்துள்ளார்.
அதில் இனியும் ஏன் உதயநிதி திரைப்படங்களில் நடிக்க கூடாது எனவும் எம்ஜி ருக்கு வந்த சிக்கலையும் விளக்கி இருக்கிறார்.மாவட்ட ஆட்சியர் , தாசில்தார் உள்ளிட்டோர், அரசு சம்பளம் வாங்கும் ஊழியர்கள்; அப்படித் தான் அமைச்சரும். அவரும் தன் அமைச்சர் பொறுப்புக்காக, அரசிடம் சம்பளம் வாங்குபவர். அதனால், அரசு ஊழியருக்கு என்ன சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள் பொருந்துமோ, அதுவே அமைச்சர்களுக்கும் பொருந்தும். தேவையானால், அமைச்சர்களை, 'பொது ஊழியர்' என்று குறிப்பிடலாமே தவிர, அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளில் இருந்து, ஒரு நாளும் தவறி சென்று விட முடியாது.
அரசு ஊழியர் எப்படி, 24 மணி நேரமும், அரசு பணிக்கு தயார் நிலையில் இருக்க வேண்டுமோ, அதே மாதிரி அமைச்சரும், மக்கள் சேவைக்காக காத்திருக்க வேண்டும். வேறு தொழில் செய்து சம்பாதிப்பதாக இருந்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட வேண்டும்.முழு நேரம், அரசுக்காக மக்கள் பணியில் ஈடுபடுவேன்' என்று கூறியே, அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர். உறுதிமொழி ஏற்ற பின், நடிப்பு தொழிலையும் பார்ப்பது, உறுதிமொழிக்கு மாறாக நடப்பது போலாகி விடும்.
அதனால், நடிப்போ, அமைச்சர் பதவியோ, இரண்டில் ஒன்றை தான், அமைச்சர் உதயநிதி தொடர வேண்டும். இந்த விஷயத்தில், அவர் கூட சரியாக தான் இருக்கிறார். ஆனால், அவரது ரசிகர் மன்ற தலைவராக மாறி இருக்கும் ரகுபதி தான், குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார்.எம்.ஜி.ஆர்., மற்றும் ராமராவ் ஆகியோர் முதல்வராக பதவியேற்ற பின், நடிக்கக் கூடாது என, மத்திய அரசு உத்தரவிட்டு, அதன்படியே அவர்கள் தவிர்த்தனர். அந்த கட்டுப்பாடு, உதயநிதிக்கும் பொருந்தும். இது சட்டமா என்று கேட்டால், எல்லாவற்றுக்கும் சட்டம் கிடையாது.
உதாரணமாக, 'உள்ளாடை அணிந்து, அதன் மேல் தான் வேட்டி அணிய வேண்டும்' என்பது சட்டம் கிடையாது. அதனால், 'வேட்டிக்கு மேலே தான் உள்ளாடை அணிந்து கொள்வேன்' என்று கூறினால், அப்படிப்பட்ட மனிதரை எப்படி எடுத்து கொள்வோமோ, அப்படித் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேநேரம், புகை பிடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விளம்பர படத்தில், அமைச்சராக இருப்பவர் நடிக்கலாம். அதிலும்கூட பணம் வாங்கி நடித்தால், அதுவும் தவறு தான். இவ்வாறு அவர் கூறினார் இந்த செய்தி தற்போது பிரபல நாளிதழில் வெளியாகி ஆளும் கட்சியினர் யாரெல்லாம் உதயநிதி நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்களோ அவர்களை அதிர செய்து இருக்கிறது.
ஆளுநரை சமாளிக்க முடியாமல் ஏற்கனவே திமுகவினர் தினம் தோறும் சட்ட நிபுணர்களை ஆலோசனை செய்து வரும் நிலையில் இருக்கிற பிரச்சனையில் புது பிரச்சனை உண்டாகாமல் இருக்க உதயநிதி நடிப்பிற்கு முழுக்கு போட முதல்வர் ஸ்டாலினே உத்தரவு போட்டு விட்டாராம்.