24 special

ஹூம் இதெல்லாம் பார்த்தா எதிர்கட்சி என்ன நினைக்கும்...! சத்தமில்லாமல் அழும் உடன்பிறப்புகள்...!

Sivajikrishmoorthi,mk Stalin
Sivajikrishmoorthi,mk Stalin

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் கேட்க போய் திமுக தரப்பு வழக்கறிஞரை நீதிபதி கேட்ட கேள்வியால் தலை குனிந்து வெளியில் சொல்ல முடியாத அவமானத்தில் இருக்கும் அறிவாலயம்!


திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது பேச்சால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். முதலில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை பற்றி அவதூறாகவும், அவரை மரியாதை குறைவாகவும் பேசி இருந்தார். அவரின் பேச்சிற்கு பல தரப்பிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி யிடம் புகார் அளித்திருந்தார் மேலும் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்தும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனால் திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அறிக்கை வெளியிட்டது. 

அதற்குப் பிறகு அவரது சத்தம் என்ன திமுக மேடையிலும் எதிரொலிக்காமல் இருந்தது பிறகு கடந்த மே மாதம் மறுபடியும் திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான தடையை ரத்து செய்து அவரை மீண்டும் கட்சி பணியை தொடங்க அனுமதித்தது. ஆனால் இந்த முடியும் அவர் அதே வேலையை செய்து பெரும் சர்ச்சையான பேச்சுக்கு காரணமாக அமைந்துள்ளார். அதாவது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு மற்றும் தமிழக ஆளுநர் ரவியையும் பற்றி மிகவும் தரக்குறைந்த வகையில் ஆபாசமாக பேசி இருந்தார். இந்த பேச்சை மேடையில் அவர் பேசும்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் அனைவரிடமும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது பிறகு குஷ்பூ அவர்கள் பெரும் கண்டனத்தையும் தெரிவித்தார். இந்த நிகழ்விற்கு பிறகு திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தனது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக அறிக்கை வெளியிட்டது. 

இந்த விவகாரத்தில் குஷ்பூ செய்தியாளர்கள் மத்தியில் கூறும் பொழுதும் தேசிய மகளிர் ஆணையம் மூலமாக தானாகவே முன்வைத்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது குஷ்பு குறித்து அவதூராக பேசியதற்காக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு மீது ஜாமின் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  நடைபெற்றுள்ளது. இந்த விசாரணையின் பொழுது திமுகவின் தலைமை பேச்சாளராக முன்பு இருந்து தற்போது நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஜாமீன் மனுவை விசாரணை செய்வதற்கு முன்பாக நீங்கள் அவர் பேசியிருந்த வீடியோவை பார்த்துவிட்டு வாருங்கள்! என்று நீதிபதி அல்லி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சார்பில் வாதாடிய வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

பிறகும் அவ்வழக்கறிஞர் மனுதாரர் 65 வயதான மூத்த குடிமகன் ஆதலால் அவரது வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதாடியுள்ளார், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீதிபதி அல்லி  ஒரு மூத்த குடிமகன் போல அவர் நடந்து கொள்ளவில்லை என நறுக்கென்று கேட்டுள்ளார். நாளை மறுதினம் இந்த மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இதெல்லாம் உங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கேட்பீர்களா என்று நான்கு கேள்வியை கேட்டு கேட்டுள்ளார் நீதிபதி அல்லி, இதன் காரணமாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வழக்கில் திமுக வழக்கறிஞர்கள் வழக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.