24 special

டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டம்...!பெரும் அச்சத்தில் ஆளும் கட்சி...!

Modi,mkstalin
Modi,mkstalin

திமுகவிற்கு இரண்டு முக்கிய விஷயங்கள் மிக பெரிய அதிர்வலைகளை மேல் மட்டம் தொடங்கி கிளை செயலாளர் வரை உண்டாக்கி இருக்கிறது, தமிழகத்தில் பிரதான எதிர் கட்சியான அதிமுகவை லஞ்ச ஒழிப்பு துறை மூலம் மிரட்டல் விடுத்து அமைதியாக்கி விட்டதாக ஒரு குரல் மெல்ல எழுந்த நிலையில்.,


தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி செய்யவேண்டிய பணியை பாஜக செய்து வருகிறது, குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது என்றே திமுக மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் நினைத்து வந்தனர்.

ஆனால் யாரும் எதிர் பாரத விதமாக அமலாக்கதுறை கைது செய்தது, அந்த சம்பவம் தான் தற்போது திமுகவிற்கு பெரும் தலைவலியை உண்டாக்கி இருக்கிறது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர்  ரவி இரண்டு முறை கடிதம் எழுதிய நிலையில் அதனை முதல்வர் நிராகரித்தார்.

முதல்வர் நிரகாரித்த நிலையில் நேற்றைய தினம் ஆளுநர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் அந்த அறிவிப்பு தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர செய்தது, மேலும் பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.பின்பு சில சட்ட நடைமுறைகள் காரணமாக உத்தரவை நிறுத்தி வைத்தார் ஆளுநர்.

இங்கு தான் தற்போது முதல்வர் ஸ்டாலினிடம் மூத்த அமைச்சர்கள் மற்றும் டெல்லியை சேர்ந்த சட்ட வல்லுநர்கள் சில விஷயங்களை கூறி இருக்கிறார்களாம். தொடர்ச்சியாக ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே செந்தில் பாலாஜியை மையமாக கொண்டு நடக்கும் சர்ச்சைகள் தேவையற்றது.

மம்தா பேனர்ஜி மற்றும் அரவிந்த் கேஜரிவால் எப்படி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர்களது அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கம் செய்தார்களோ அதே போன்றே ஸ்டாலினும் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் ஏன் ஆலடி அருணா ஊழல் குற்றசாட்டில் சிக்கிய போதும் மத்திய அமைச்சராக ஆ ராசா இருந்த போதும் இருவரையும் கருணாநிதி பதவியில் இருந்து விலக கூறி இருக்கிறார்.

அப்படி இருக்கையில் செந்தில் பாலாஜி விஷயத்தில் நீங்கள் ஆளுநரிடம் மல்லுக்கு நிற்பது தவறான சமிக்கையை பொது மக்களுக்கு கொடுக்கும். எனவே ஆளுநரிடம் நேரடியாக மோதல் போக்கை கடை பிடிப்பதை நிறுத்திவிட்டு இன்னும் ஓரிரு நாளில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வதே சரியான நடைமுறையாக இருக்கும் என சட்ட வல்லுநர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்களாம்.

இந்த ஆலோசனைக்கு இடையேதான் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் தென்னரசு, சட்டதுரை அமைச்சர் ரகுபதி, எம் பி வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அதில்.,சென்னை தலைமை செயலகத்தில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது வில்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றாமல் செந்தில் பாலாஜியை ஆளுநர் ரவி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். முதல்வர் அறிவுறுத்தலின்படி ஆளுநர் செயல்படவில்லை என்றால் அவர் எடுக்கும் முடிவுகள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்துக்களை பின்பற்றாமல் தன்னிச்சையாக செந்தில் பாலாஜி அமைச்சராக முடியாது என்று ஆளுநர் ரவி எப்படி கூற முடியும். ஆளுநருக்கு அமைச்சரை நீக்க அதிகாரம் கிடையாது. நாளை நீதிபதியை நீக்குகிறேன் என்று ஆளுநர் கூறுவார். தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஆளுநரின் நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம்” என்று கூறினார்.

இதன் மூலம் ஆளுநர் அனுப்பிய கடிதம் குறித்து திமுக அரசு நீதிமன்றம் செல்லாது என்பது தெளிவாக புரிய தொடங்கி இருக்கிறது ஒரு வேலை அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டது குறித்து நீதிமன்றம் சென்றால் அங்கு செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் பெரும் சிக்கலாக முடியும் என்பதால் வேறு வழியில்லாமல் ஆளுநர் உத்தரவை புறக்கணிப்பதாக தெரிவித்து செந்தில் பாலாஜி விஷயத்தை அப்படியே பெரிது படுத்தாமல் விலகி செல்ல திமுக தலைமை முடிவு செய்து இருக்கிறதாம்.

இது ஒருபுறம் திமுகவிற்கு பின் விளைவுகளை உண்டாக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மேலும் திகிலை திமுகவிற்கு உண்டாக்கி இருக்கிறதாம்,  ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி  2024 தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்து தெரிவித்த தகவலும் திமுக தலைமைக்கு தெரியவர அது குறித்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு இப்போதே கவலை உண்டாகி இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.