24 special

உளவு துறையின் தலைவன் என்பதை நிரூபித்த தமிழக ஆளுநர் ரவி..!

Rn ravi
Rn ravi

தமிழகத்தில் நடைபெற்ற மூன்று முக்கிய மாற்றங்கள் மூலம் தான் உளவு துறையில் பணியாற்றியவன் யாரை எங்கு அடிக்க வேண்டுமோ அங்கு சரியாக அடிக்கும் வித்தை தெரிந்தவன் என்பதை தமிழக ஆளுநர்  ஆர். என். ரவி நிரூபித்து இருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது, தமிழகத்தில் ஆளுநர் மற்றும் ஆளும் திமுக இடையே நேரடி அதிகார மோதல் உண்டாகி இருக்கிறது.


இந்தியா ஒரே நாடு மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பலன் அடிக்க கூடியவை என தமிழக ஆளுநர் ரவி செல்லும் இடங்களில் எல்லாம் கூறிவருகிறார் மேலும் புதிய கல்வி கொள்கையை அமல்பாடுத்துவது குறித்தும் பேசிவருகிறார் ஆளுநர், இந்த சூழலில் தமிழக அரசு ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை நீக்கும் வண்ணமாக புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றி அதனை ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளது.

இப்படி ஆளுநர் VS திமுக அரசு என்ற மோதல் ஒருபுறம் இருக்க ஆளுநர் செய்த செயல்கள் ஒரு தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளன, மயிலாடுதுறைக்கு ஆதின நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்ற ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய விவாகரம் பெரும் சர்ச்சையை உண்டாக்க, அதனை உள்துறை அமைச்சகம் வரை கொண்டு சென்றார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு எழுதிய கடிதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக ஆளுநரின் கான்வாயை தடுக்க முயன்ற நபர்கள் மீது, பிரிவு 124 -யை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க புகார் தெரிவித்து இருந்தார், இந்த சூழலில்தான் உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆளுநர் கோவை வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன.

மயிலாடுதுறையில் நடந்தது போன்று அவருக்கு கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கூட்டம் தயாரானது, பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவிப்பும் வெளியிட்டனர், ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தங்கள் கருப்பு கொடி போராட்டத்தை நிறுத்துவதாக அதே அமைப்பினர் தேய்ந்த முகத்துடன் தெரிவித்தனர்.

ஏன் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை திரும்ப பெற்றீர்கள் என்ற கேள்விக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்ற பதிலை கொடுத்தனர், ஆனால் அதில் உண்மையில்லை, எத்தனையோ போராட்டங்களை காவல்துறை அனுமதி மறுத்த பிறகுதான் நடத்தி இருக்கிறார்கள் அப்படி இருக்கையில் திடீர் என ஏன் இவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற கேள்விக்கு TNNEWS24 குழுவிற்கு விடை கிடைத்துள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரம் TNNEWS24-டம் தெரிவித்த கருத்துக்கள் ஆச்சர்யத்தை நமக்கு கொடுத்தன தமிழகத்தின் முந்தையை கவர்னர் பன்வாரிலால் ப்ரோகித் ஆய்விற்கு சென்றபோது திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது, ஆனால் தற்போதைய சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்கிறது.

ஒரு படி மேலே சென்று மதுரையில் ஆளுநரை அவதூறாக பேசிய பசும்பொன் பாண்டியன் என்ற நபரை காவல்துறை நேரடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்தது, முந்தையை ஆளுநர் பன்வாரிலால் குறித்து சில ஊடகங்கள் பத்திரிகைகள் அவதூறு எழுதின ஆனால் ஆர்.என்.ரவி குறித்து அது போல் எந்த தகவலும் வெளிவரவில்லை என்பதில் இருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் ஆளுநர் ரவி என்ன செய்கிறார் என சற்று சிரித்த முகத்துடன் தகவலை தெரிவித்தார் ஆளுநர் மாளிகையை சேர்ந்த ஒருவர்.

இது ஒருபுறம் என்றால் ஆர். என். ரவி தனது உளவுத்துறை அனுபவங்களை மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறார் அதன் அனுபவம் விரைவில் என்ன என்பது ஓரிரு வாரங்களில் தெரியவரும் அப்போது தமிழகமே மிக பெரிய பரபரப்பை சந்திக்கும் எப்படி அதிமுகவில் பிளவு உண்டான போது யார் முதல்வர் என்ற போட்டியின் போது ஆளுநர் மாளிகையின் முக்கியத்துவம் தெரியவந்ததோ அதே போன்று இனி வரும் நாட்களில் வேறு ஒரு விவாகரத்தில் ஆளுநர் மாளிகை மிக பெரும் முக்கியத்துவம் பெரும் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ தன்னை எதிர்த்து கருப்பு கொடி காட்டிய குழுவினர் மட்டுமின்றி வழக்கமாக ஆளுநர் விவாகரம் என்றால் முன் வரிசையில் நிற்கும் பலர் அமைதியாகி இருபதன் மூலம் தான் உளவு துறையின் தலைவன் என நிரூபித்து இருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி.