24 special

#BREAKING யாரும் பாஜக அலுவலகம் செல்ல கூடாது திருமா திடீர் அறிவிப்பு பகிர் பின்னணி!

Thirumavalan and annamalai
Thirumavalan and annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து இன்று விசிக நிர்வாகி ஒருவர் அம்பேத்கர் குறித்த புத்தகத்தை கொடுக்க இருப்பதாக செய்திகள் பரவியது மேலும் அண்ணாமலையும் திருமாவளவனின் வலது கரம் அல்லது இடது கரம் யாராக இருந்தாலும் 26-ம் தேதி கமலாலயம் வரலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.


இந்த சூழலில் அண்ணாமலையை சந்திக்க விசிகவை சேர்ந்த சப் ஜூனியர் சங்க தமிழன் என்பவர் செல்வதாக இருந்தது, ஆனால் தற்போது திருமாவளவன் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், பாஜக தமிழகத் தலைவருக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அவர்களிடம் கூறியுள்ளேன்.

எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும்.  இதுவரை 20000 புத்தகங்களைப்  படித்திருக்கிறார் எனும்போது அவற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களும் இருக்கலாம். எனினும் அவருக்குத் தேவையெனில் அம்பேத்கரின் நூல்களை அஞ்சலில் அனுப்பி வைப்போம். அல்லது அவர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.

அதாவது நேரடியாக பாஜக அலுவலகம் செல்லவேண்டாம் என திருமாவளவன் பின்வாங்க தமிழக பாஜக அலுவலகம் சென்றால் செல்லும் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற காரணத்தால் திருமாவளவன் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் எனவும், அல்லது விவாதம் நடந்தால் உண்மையில் அம்பேத்கர் தெரிவித்த பல கருத்துக்கள் தமிழக மக்களுக்கு தெரியவரும் என்ற அச்சத்தின் காரணமாக திருமாவளவன் பாஜக அலுவலகம் செல்லவேண்டாம் என குறிப்பிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

மொத்தத்தில் அண்ணாமலையிடம் சவால் விடுத்து இப்போது மண்ணை கவ்வி இருக்கிறார் விடுதலை சிறுத்தை நிர்வாகி சங்கம் தமிழன் என பலரும் கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர்.