பிரதமர் மோடியின் ஆதரவாளர் பூமாகுமாரி பல்வேறு பாடதிட்டங்கள் மாற்றப்படும் நிலையில் அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :-
நமது கலாச்சாரம் நமது வரலாறு, நமது பண்பாடு போன்றவற்றை நமது புத்தகங்கள் கட்டாயமாக நம் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் நாமெல்லாம் சிறுவர்களாக இருந்தபோது இடதுசாரி முனைவர், அந்த சிந்தனை உடைய பேராசிரியர்களும் மட்டுமே கோலோச்சிய காலம்.
அவர்களைத்தான் அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. எனவே நமக்கு தெரிந்ததெல்லாம் முகலாயர் வரலாறு தான். இந்தியாவின், ஏன் இந்த பரந்து விரிந்த பாரத கண்டத்தின் பல்லாயிர ஆண்டுகள் வரலாற்றில் நாம் கொண்டாட வேண்டியது எத்தனை எத்தனையோ.!
அப்படி விஷயங்களும் அரசர்களும் ஆண்ட பரம்பரை களும் இருக்க, இந்த பாழாய்ப்போன முகலாயர்கள் பற்றி நாம் படித்து தொலைத்தோம். அவர்கள் நம்மை வெளியிலிருந்து வந்து மிகக் கேவலமாக நடத்தியது மட்டுமல்ல, ஆட்சி செய்தது மட்டுமல்ல, நம்மை பெருமளவில் மதம் மாற்றியதும் நடந்தது.
ஆனால் அவர்களைப் பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளின நமது வரலாற்றுப் புத்தகங்கள். அதை இப்பொழுது தான் மத்திய அரசு நமது மோடி அரசு மாற்றி அமைக்க நல்லவேளை வந்திருக்கிறது நல்ல காலம் பிறந்திருக்கிறது என்று பாராட்டி தனது கருத்தை பதிவு செய்துள்ளார் பூமா குமாரி.