தேசிய அரசியல் ஆசையில் மும்பையில் இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென வந்த ஃபோன் கால்...! அலறிய முதல்வர்...! இன்னும் ஆறு மாதத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 28 எதிர்கட்சிகள் ஒன்று இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக என பல முக்கிய கட்சிகளிடம் பெற்றிப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், பெங்களூரில் இரண்டாவது கூட்டமும் நடைபெற்றது.
இருப்பினும் இதன் முதல் கூட்டத்திலேயே தமிழகம் சார்பாக கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாதியிலே திரும்பி வந்ததும் அதற்கு விமானத்திற்கு நேரமாகிவிட்டது என்று காரணம் கூறியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கிடையே அரசியல் சார்ந்த மற்றும் மோதல் சண்டைகள் இருந்ததும் செய்திகளில் வெளியானது. இந்த கூட்டணி அமைக்கப்படுவதற்கு முன்பாக இதனை முழுவதுமாக நம்பிக்கொண்டிருந்த திமுக தரப்பு முதல் மாநாட்டை பார்த்த உடனே முதலில் நாம் தமிழகத்தில் நம் பலத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர்.. இந்த நிலையில் இந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எப்படியாவது தேசிய அரசியலில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று நினைத்து மும்பையில் முகாமிட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கட்சியின் பஞ்சாயத்து தலைவலியை கொடுத்ததாகவும் இவர்களுக்கு இதே வேலையாய் போயிருச்சு, இப்படி முக்கிய வேலையாக வெளியூரில் இருக்கும்போதுதான் ரைடுகளில் சிக்குவது வழக்குகளில் சிக்குவது கைதுகளில் சிக்குவது அல்லது கட்சிக்குள்ளே பஞ்சாயத்து கிளப்புவது என்று கடுப்பேரி முதல்வர் அந்த பஞ்சாயத்தை சமாளிக்க அமைச்சர் தங்கம் தென்னரசை அனுப்பி வைத்ததாக சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது, முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப்பிற்கும் திருநெல்வேலி மாவட்டம் மேயர் சரவணனுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் எழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. ஆனால் தொடக்கத்தில் இருவரும் தோழர்களாக இருந்துள்ளனர் இடையில் தான் மேயர் சரவணன் தனித்து செயல்பட தொடங்கியதால் திமுக மாவட்ட செயலாளருக்கும் இவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக திமுக மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் மேயர் சரவணனுக்கு எதிராக கொடி பிடித்துள்ளார்கள்.இது தொடர்பாக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக தலைமைக்கு புகார் வந்துள்ளது. இதனை தொடர்ந்து மேயரின் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதால் தலைமை கோபமடைந்து பஞ்சாயத்தை விசாரிக்க திமுக தலைமை அம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசை அனுப்பியுள்ளது.
தேசிய அரசியல் ஆசையில் மும்பையில் இருக்கும் நேரத்தில் நேரத்தில் கூட ஏதாவது பஞ்சாயத்தை இழுத்து விட்டு என் உயிரை வாங்குகிறார்கள் என முதல்வர் தரப்பு புலம்பியதாக தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தென் மாவட்டங்கள் அண்ணாமலையின் யாத்திரையினால் திமுகவிற்கு பின்னடைவு என உளவுத்துறை அறிக்கை வேறு கிடைத்துள்ளது மேலும் அங்கு பாஜக அசுரத்தனமாக வளருகிறது என சில திமுகவின் மூத்த அமைச்சர்களே கூறுகின்றனர். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் வேறு பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் வேறு தெரிவிக்கின்றன இப்படி இருக்கும் நேரத்தில் இப்படி திமுகவினர் வேறு அடித்துக்கொள்வது அறிவாலயத்தை புலம்ப விட்டுள்ளதாகவும், அங்கு சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விவகாரம் பெரும் சிக்கல் என அறிவாலய தலைமைக்கு செய்தி அனுப்பியுள்ளதாகவும் சில தகவல்கள் கசிகின்றன.