24 special

தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா... ஸ்டாலினுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை... திமுகவுக்கு சூடு வைத்த தலைவர் ...

mkstalin, jp natta
mkstalin, jp natta

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மிக மோசமானது என்றும். ஆளும் திமுக அரசுக்கு அறிவும்இல்லை மனசாட்சியும் இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்தார். சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சவுகார்பேட்டையில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், மிண்ட் பகுதியில் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையில் பங்கேற்றார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, வள்ளலார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா,தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை என்றும் தான் வரும் வழியில் எல்லாம் கடைகளை திமுகவினர் மிரட்டி கடைகளை மூட வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு மோசமான தலைவரால் சீரழிகிறது என காட்டமாக கூறினார்.


மேலும், தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன, எதற்காக இவ்வளவும் போலீசார்,சென்னையில் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பது எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துவதாக ஜேபி நட்டா குற்றம் சாட்டினார்.ஆனால், இது நீண்ட காலம் இருக்கப்போவது இல்லை. என்றும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்தால், திமுகவின் விளக்கு அணைக்கப்படும் எனவும், ஊழலற்ற அரசை மத்தியில் நடத்திவருவதாக தெரிவித்தார்.தமிழ்நாட்டை திசை திருப்பும் திமுகவின் தலைமையில் இந்த மாநிலம் இருந்து வருகிறது என்றும். ஊழல் அரசை செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவார்கள். இந்த மண்ணில் யாரெல்லாம் ஊழல் ஆட்சி செய்து வருகிறார்களோ, அவர்கள் எல்லாம் தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்துகொண்டு இருக்கிறதுஎன்றும், பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழகம் எப்போதும் இருந்து வருகிறது எனவும் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசி வருகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடுஎனவும் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. எனவே விரைவில் திராவிட ஆட்சிக்கு முடிவுக்கட்டப்படும் என்றும் திமுகவின் மோசமான ஆட்சி சென்று தமிழகத்தில் நல்லாட்சி மலர போவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்தார்.