நடிகர் விஜய் கட்சி தொடங்கியது தான் தற்போது வரை பேசு பொருளாக உள்ளது. விஜய் த்ரோபித்து சினிமாவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்து பிரபல நடிகை மக்கள் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே என ஆதரவு தெரிவித்து பேசியது சினிமா வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுவரை விஜய்யுடன் நடிக்காத இந்த நடிகை பேசியிருப்பது மக்களை எதிர்பார்ப்பில் எழுப்பி விஜய் கட்சியில் இணையப்போகிறாரா என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளார்.
நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற தனது அரசியல் கட்சியின் பெயரை கடந்த 2-ம் தேதி அறிவித்தார். தனது கட்சி வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்று தெரிவித்தார். தற்போது நடிக்க ஒப்புக்கொண்ட படத்தில் மட்டுமே விஜய் நடிப்பதாக கூறினார். இதனால் இனி சினிமாவில் விஜயை பார்க்க முடியாத என்கிற அளவுக்கு ரசிகர்களை சோகத்தில் தள்ளியுள்ளது. இந்த நிலையில் நடிகை வாணி போஜன் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்வி அவரிடம் கேட்ட நிலையில், “நல்லது நினைக்கும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். செங்களம் சீரிஸ் நடிக்கிறப்போ ரொம்ப அழகாக இருந்தது. அந்த சமயத்தில் அரசியலில் இருக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. இப்பவும் இருக்கு. விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன பண்ணுகிறார் என்பதை பார்க்கலாம். எல்லாம் நம் கையில் தான் இருக்கு” என பதிலளித்தார்.
விஜய், விஷால் அரசியலுக்குள் வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த நடிகை வாணி போஜன், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என்னைக் கேட்டால் நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பது பற்றி நமக்கும் தெரியவரும்” என்று கூறினார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாக விஜய்யின் கட்சியில் வாணி போஜன் இணையப் போகிறாரா என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் அறிமுகமான வாணி போஜன் அப்போது தெய்வ திருமகள் என்ற சன்டிவியில் ஒலிப்பணத்தில் அதில் முக்கிய ரோலில் வாணி போஜன் நடித்திருந்தார் அதன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். முன்னதாக நடிகர் ஜெய்யுடன் ஒரு சில படத்தில் நடித்திருந்தார். அண்மையில், வாணி போஜன் நடிப்பில் 'செங்களம்' என்ற வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில், சூர்யகலா என்ற கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்திருந்தார் வாணி போஜன். அதில், அவரது கட்சியின் பெயர் 'நமது கழகம்' என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் வாணி போஜன் அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறாரா என்பதை வரும் நாட்களில் தெரியவரும்.