Cinema

பாலிவுட்டில் கால் பதிக்கும் பிரபல இயக்குனர்.... அப்போ சிவகார்த்திகேயன் வாழ்க்கை..?

Salman khan, Murugadoss
Salman khan, Murugadoss

சினிமாவில் தனக்கென்று ஒரு கதைக்களத்தை வைத்துள்ளவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். இவர் தற்போது கோலிவுட்டில் இருந்து மீண்டும் பாலிவுட் சினிமா களத்திற்கு செல்லவுள்ளார். கடந்த முறை அமீர்கானை வைத்து படம் எடுத்த நிலையில் தபோது பாலிவுட் காங்க் நடிகரான சல்மான்கான் உடன் பயணிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.கே 23 படத்தை தொடங்கவுள்ள நிலையில் பாலிவுட்டில் மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.


தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். அஜித் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படம் ஏஆர் முருகதாஸின் கேரியரையே உச்சம் தொட வைத்தது. இரண்டாவதாக கேப்டன் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சூர்யாவுடன் கஜினி, 7 ஆம் அறிவு, சிரஞ்சீவி நடிப்பில் ஸ்டாலின், பாலிவுட்டில் அமீர்கான் நடித்த கஜினி, மகேஷ் பாபுவின் ஸ்பைடர், விஜய் நடிப்பில் கத்தி, துப்பாக்கி, சர்கார், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஆகிய படங்களை இயக்கினார்.

முருகதாஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் எடுத்த படங்கள் எல்லாம் முன்னணி நடிகராக இருப்பவர்கள் தான். சில ஆடுகளகள படம் இயக்கமால் இருந்த முருகதாஸ், கடந்த சில ஆடுகளுக்கு முன்பு வெளியான தர்பார் படத்தின் தோல்வியினால் படம் எடுக்காமல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனை கொண்டு ஒரு படத்தை இயக்க இருப்பதாக கமிட் ஆனார் முருகதாஸ் சிவா நடித்த வரும் படம் லேட் ஆவதால் அப்படியே பாலிவுட் பக்கம் சென்ற முருகதாஸ் அங்கு முன்னணி நடிகரான சல்மான் கான் உடன் படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயனை கொண்டு வரும் ஏப்ரல் மாதம் முதல் படத்தை தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவசர அவசரமாக படத்தை முடித்து பாலிவுட் பக்கம் செல்ல முருகதாஸ் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. அமீர்கான் நடிப்பில் கஜினி இயக்கிய ஏஆர் முருகதாஸ், பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தார். அதன்பின்னர் அவர் இந்தியில் படங்கள் இயக்கவில்லை. இந்த நிலையில் தான் தற்போது சல்மான் கானுடன் ஏஆர் முருகதாஸ் இணையவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் போர்ச்சுக்கல் உட்பட ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்திற்கு சுமார் 400கோடி வரை தொகை போட்டுள்ளாராம் இயக்குனர் முருகதாஸ் பாண் இந்திய படமாக உருவாகும் அந்த படம் அடுத்த மாநாட்டு வெளியாகவும் என கூறப்படுகிறது. இது தொடபாரென அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு சார்பாக வெளியாகவும் என தெரிவிக்கிறது. சல்மான்கானை நம்பி சிவகார்த்திகேயனை விட்டுடாதீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். இனியத்தில் முருகதாஸ் ஹாஸ் டேக் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.