24 special

தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்.... கைது நடவடிக்கையில் சிக்க போவது யார்?

Annamalai and stalin
Annamalai and stalin

தமிழக அரசியல் களம் எதிர் பார்த்த பரபரப்பு சம்பவங்களை தாண்டி மிக பெரிய அளவில் நாளுக்கு நாள் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது, அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை சேர்ந்த அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி 50 கோடி இழப்பீடு கேட்டு நோட்டிஸ் அனுப்பிய நிலையில் தற்போது தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ என ஒன்றை சவுக்கு சங்கர் வெளியிட்டு இருக்கிறார்.


அந்த ஆடியோவில் ஒரே வருடத்தில் உதயநிதி மற்றும் சபாரீசன் இருவரும் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும் அதை வெள்ளையாக மாற்றுவது எப்படி என கடும் பயத்தில் இருப்பதாகவும் PTR ஆங்கிலத்தில் பேசும் வார்த்தைகள் இடம்பெற்று இருக்கின்றன.

டெல்லியில் உள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய ஆடியோ என சவுக்கு சங்கர் குறிப்பிட்டு இருக்கிறார், இதெல்லாம் ஒரு புறம் என்றால் தற்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த இருக்கும் அடுத்த தகவல் வெளியாகி இருக்கிறது, பலரது சொத்து பட்டியலை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில் அதற்கான வலுவான ஆதாரத்தை கையில் வைத்து இருக்கிறதாம்.

மாநிலத்தின் நிதி அமைச்சர் ஒருவரின் பெயரில் ஆடியோவே வெளியான நிலையில், தற்போது விரைவில் சிபிஐ நேரடியாக இந்த விவகாரத்தில் முகாந்திரம் இருப்பதாக வழக்கு பதிவு செய்ய 90% வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, அப்படி சிபிஐ வழக்கு பதிவு செய்தால் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிற்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை தான் உதயநிதி மற்றும் சபரீசன் இருவருக்கும் உண்டாகலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே வருமான வரித்துறை கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து பாஜக சார்பில் வெளியிட்ட சொத்து பட்டியலில் யார்  பெயர் இடம் பெற்று இருந்ததோ அவர்கள் குறித்த முழுமையான தகவலுடன், ஆடியோ வீடியோ உரையாடல்களை ஆதரமாக சேகரித்து வைத்து இருக்கிறார்களாம்.

இனி வரும் நாட்களில் ஒவ்வொன்றாக வெளி வரும் எனவும், நேரம் காலம் இடம் என அனைத்தையும் பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டு அதன் மூலம் மக்களை கேள்வி எழுப்ப வைக்க பாஜக முடிவு செய்து இருக்கிறதாம், என்ன தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்தாலும் தேர்தலின் போது அதை வைத்தே அனுதாப வாக்குகளை அள்ளி வெற்றி பெற்று விடுகிறார்கள்.

அந்த வாய்ப்பை கொடுக்காமல் மக்களே நேரடியாக இவர்களுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் எப்படி வந்தது என கேள்வி கேட்கவைத்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்க இருக்கிறதாம் புலனாய்வு அமைப்புகள்.

தற்போது PTR பேசும் ஆடியோ என சவுக்கு சங்கர் வெளியிட்டு இருக்கும் ஆடியோ தேசிய அளவில் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடியை இருவர் குவித்து இருக்கிறார்களா? எப்படி வந்தது இத்தனை கோடி என்ன நடக்கிறது? வெளியான ஆடியோ உண்மையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.