24 special

மணல் விவகாரத்தில் எஸ்கேப்பாக முயற்சித்த தமிழக அரசு....ஒரே உத்தரவில் தமிழக அரசின் தலையில் இடியை இறக்கிய உச்சநீதிமன்றம்!

ed, head office
ed, head office

தமிழகத்தில் இயங்கி வரும் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவிற்கு அதிகமான மணல்கள் அள்ளப்பட்டு விற்கப்படுவதாகவும் அப்படி சட்டவிரதமாக விற்கப்படுகின்ற மணல்கள் மூலம் கிடைக்கின்ற வருமானம் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் தமிழகத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மணல் குவாரிகளின் அதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தமிழகத்தில் ஆளும் தரப்பிற்கு மிகவும் நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது தமிழக முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் மணல் குவாரிகளின் அதிபர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து 12.82 கோடி ரூபாய் ரொக்கத்தையும் தங்க நகைகளையும் கைப்பற்றியது. இதனால் அமலாக்கத்துறை தரப்பில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொறியாளர் பொதுப்பணி திலகம், தமிழக அரசு மற்றும் 10 மாவட்ட கலெக்டர்களையும் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது.


சம்மனை ஏற்ற முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்க துறையின் விசாரணைக்கு ஆஜராகினார். ஆனால் அமலாக்கத்துறை தங்களுக்கு அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் திருச்சி, தஞ்சாவூர், கரூர், வேலூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்க துறையின் சம்மனுக்கு தடை விதித்து விசாரணையை தொடர மட்டுமே அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தனர் அதே சமயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த தடையை எதிர்த்து அமலாக்கத் துறையும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு சுப்பிரகோட்டில் விசாரணைக்கு வந்த பொழுது ஒரு மாநிலத்தில் குற்றம் நடந்திருந்தால் அதை கண்டுபிடிப்பதற்கு அமலாக்க துறைக்கு தமிழக அரசு உதவிகள் வழங்குவதில் என்ன தீங்கு நடந்துவிடப் போகிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு அமலாக்க துறையின் சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதே விசித்திரமானது மற்றும் அசாதாரணமான செயல் என்று நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு கூறியதோடு அமலாக்கத்துறை,  நான்கு எஃப் ஐ ஆர்களின் அடிப்படையில் பணமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணையை துவங்கி உள்ளது. 

அதனால் மாவட்ட கலெக்டர்கள் உட்பட அமலாக்கத்துறையின் சம்மனை பெற்ற அனைவரும் அமலாக்க துறையில் சம்மனிற்கு மதிப்பளித்து நேரில் ஆஜராகி விசாரணைக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் அமலாக்க துறையின் சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கும் தடை விதித்து இனி அடுத்து அமலாக்கத்துறை குறிப்பிடும் தேதியில் ஐந்து மாவட்ட கலெக்டர்களும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம். தமிழகத்தில் ஆட்சியை நிறுவி பல வழிகளில் ஊழல் செய்து வந்த தமிழகத்தின் ஒரு ஊழல் வெளியாகி அதில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பதை  தடுத்து நிறுத்திய திமுக அரசிற்கு உச்ச நீதிமன்றம் தற்போது பதிலடி கொடுத்து அமலாக்கத்துறை இது குறித்த விசாரணையை மேற்கொள்ளவும் அதற்கு தமிழக அரசு உள்ளிட்ட அமலாக்க துறையின் சம்மனை பெற்ற அனைவரும் நேரில் ஆஜராகும் படியும் உத்தரவிட்டிருப்பது திமுக அரசுக்கு தலையில் இடியை இறங்கியுள்ளது.