Cinema

சிக்கிய அமீர்...சம்பவம் செய்யும் சூர்யா படைகள்..!

Ameer, Surya
Ameer, Surya

சென்னை மேற்க்கு மாவட்ட முன்னாள் திமுகவின் அயலக அமைப்பு செயலாளரான ஜாபர் சாதிக் என்பவர் பொதி பொருள் கடத்தல் வழக்கில் தேடும் முக்கிய குற்றவாளியாக இருந்து வருகிறார். இவர் தலைமறைவானதை அடுத்து தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவின் உலுக்கி எடுத்த சம்பவமாக மாறியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேர் கைது செய்துள்ளனர். ஜாபர் சாதிக்கை திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் என அனைத்திலும் நீக்கினர்.


இந்நிலையில், ஜாபர் சாதிக் அரசியலை தாண்டி சினிமாவில் தயாரிப்பாளராக முதலீடு செய்து வந்தார். சினிமாவில் ஜாபருக்கு நெருக்கத்தில் இருந்தவர் இயக்குனர் அமீர் நெருங்கிய நண்பராகவும், வியாபார ரீதியாக இருந்துவந்தார். அப்போது வேண்டுமானாலும் அமீரை கைது செய்யலாம் அல்லது விசாரணைக்கு அழைத்து செல்லலாம் என்ற சூழ்நிலையில் உள்ளார். என்னதான் தனக்கும் ஜாபர்க்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்று விளக்கம் கொடுத்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழ் சினிமா வட்டாரங்கள் பிரிந்து கிடைக்கும் நிலையில், ஏற்கனவே பத்து ஆன்டுகளாக தொடர்ந்து வரும் ஞானவேல் ராஜா மற்றும் அமீர் இடையே பருத்திவீரன் பிரச்சனையானது தொடர்ந்தது. இதில் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக அவரது உறவினர்களான கார்த்திக், சூர்யா உள்ளிட்ட சிவகுமார் குடும்பத்தார்கள் இருந்தனர். மறுபக்கம் அமீருக்கு ஆதரவாக நடிகர் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட சில சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். அப்போது, இதில் எதற்காக அந்த படத்தின் நடிகர் கார்த்திக் மற்றும் சூர்யா மௌனம் காக்கின்றனர் என கேள்வியை முன்வைத்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு இந்த பஞ்சாயத்து பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் அப்படியே அந்த பிரச்சனை நீர் ஊத்திய நெருப்பாக இருந்துவந்தது. அந்த பிரச்சனை அப்படியே முடிக்க காரணம் அமீர் தனது சொந்த லாபத்திற்காகவும் சினிமாவில் மீண்டும் அவதாரம் எடுக்கவே பழையதை கிளப்பி வருகிறார் என நடிகர் கார்த்தி தரப்பில் கூறப்பட்டது. ஞானவேல் இதில் அறிக்கை மூலம் தனது பேச்சுக்கு மௌனம் காத்து அறிக்கையை மட்டும் வெளியிட்டு வந்தார். 

இந்தநிலையில், மீண்டும் அமீர் மீது ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது, போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் மூலம் ஆமிருக்கும் தொடர்பு இருக்கலாம் என பேசப்படுவது. சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமீர் ஒருபக்கம் தனக்கும் ஜாபர் அவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் தெளிவு படுத்தி வருகிறார். பருத்திவீரன் படத்தில் மௌனம் காத்துவந்த ஞானவேல் ராஜா உள்ளிட்ட சூர்யா தரப்பினர் இது தான் நேரம் என தங்களது பங்கை செய்து வருகின்றனர். அதாவது அமீர், ஜபார் சாதிக் உள்ளிட்ட ஆதாரங்களை பொது வெளியிலும் அரசு அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளிடம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நாட்களில் அமீர் கைது செய்ய தேவையான மூல ஆதாரத்தையும் யார் யாரிடம் அவர் தொடர்பில் இருக்கிறார் என்பதை மொத்தமாக முக்கியமான அரசு அதிகாரி ஒருவருக்கு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சினிமா துறையை சேர்ந்த சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் என்று பலர் சிக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஞானவேல் ரவுக்காக சினிமா துறையை சேர்ந்தவர்கள் பொங்கிய நிலையில், தற்போது அமீர் விவாகரத்துக்கு சினிமா துறை மௌனம் காக்க காரணம் அமீர் மீது வரும் சர்ச்சையானது போதை பொருள் தொடர்பாக இருப்பதால் யார் வாயை திறந்தாலும் தாங்களும் மாட்டி கொள்வோம் என நினைத்து வருகிறார்களாம் சினிமா துறையை சேர்ந்தவர்கள்.