தமிழ்நாட்டில் பல சிறப்பு வாய்ந்த கோவில்கள் அமைந்திருக்கிறது. அதில் மிகவும் பழமையான கோவிலாகவும், மன்னர் வந்து வழிபட்டு சென்ற ஒரு கோவிலாகவும் சென்னையில் உள்ள பழைய ஜார்ஜ் டவுனில் பாரிமுனை பகுதியின் தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள கோவில்தான் இந்த சிறப்பு வாய்ந்த காளிகாம்பாள் கோவில்!! தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் சிற்ப கலையாக இருந்தாலும் சரி, கட்டிடக்கலையாக இருந்தாலும் சரி அதனை கோவில்களில் காணலாம்....
அந்த நாயக்கர் கால விஸ்வகர்மா என்னும் சமூகத்தினரால் கட்டப்பட்டது தான் இந்த சென்னையில் அமைந்திருக்கும் காளிகாம்பாள் கோவில். முதலில் சென்னை கடற்கரை பகுதியில் இந்த கோவில் அமைந்திருந்தது. அதன் பிறகு 1640 ஆம் ஆண்டு கடற்கரை பகுதியில் இருந்து தற்போது அமைந்திருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டு சீரமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த கோவிலுக்கு ஒரு புதிய ராஜ கோபுரம் நிறுவப்பட்டது.
பொதுவாக காளியம்மன் என்றாலே கையில் தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் போன்றவற்றை வைத்துக்கொண்டு மிகவும் கோபத்துடன் இருப்பது போல காட்சியளிப்பார். இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் தேவி அன்னை காளிகாம்பாள வடிவம் எழில் கொஞ்சம் திருமேனியுடன், அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டு, நவரத்தின மணி மகுடம் சூடி, இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டது போல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இவ்வாறு மற்ற காளி கோவில்களை காட்டிலும் இந்த கோவிலில் அமைந்திருக்கும் காளியம்மாள் மிகவும் வித்தியாசமாகவும், சாந்தமாகவும் அமைந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு மன்னர் ஒருவர் வந்து வழிபட்டு சென்று இருக்கிறார். அவர் யார்?? எப்படி இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றார் என்பதை பற்றி விரிவாக காணலாம்!!
சத்ரபதி சிவாஜி!! வீரசிவாஜி என்பவரை யாருமே மறந்திருக்க மாட்டோம். இந்திய மன்னர்களின் அதிகமாக போற்றப்படும் மன்னர்களில் ஒருவராக இந்த சத்திரபதி சிவாஜி இன்றுவரையிலும் இருந்து வருகிறார். சோழ மன்னருக்கு அடுத்து அதிகமாக போற்றப்படும் மன்னராக இவர் இருந்து வருகிறார். அந்த காலகட்டங்களில் தென்னகத்தை நோக்கி இவர் படையெடுக்கும் பொழுது வேலூர் செஞ்சி ஆற்காடு போன்ற பகுதிகளை கைப்பற்றிவிட்டார். அதன் பிறகு இவர் படையெடுக்கப் போவது மதராஸ் எனப்படும் தற்போதைய சென்னையாக இருந்தது.
அப்போது சென்னையின் ஆளுநராக இருந்த Streynsham மாஸ்டர்க்கு தெரியவந்து சிவாஜி சென்னை நோக்கி படையெடுத்தால் கண்டிப்பாக நம்மை என்று நிலத்தை கைப்பற்றி விடுவார் என்று நினைத்தார். ஆனால் சத்திரபதி சிவாஜி சென்னையின் மீது போர் தொடுக்க வில்லையாம்!! அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் அங்கு அமைந்திருக்கும் காளிகாம்பாள் கோவில் தான் சென்னையில் சிவாஜி போர் தொடுக்காமல் போனதற்கு காரணம் என்று பலர் கூறி வருகின்றனர். மேலும் இந்த கோவிலுக்குள் அம்பாளை தரிசிக்க வேண்டும் என்று சிவாஜி மாறுவேடத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே தற்போது இந்த கோவிலில் காளிகாம்பாளை சத்ரபதி சிவாஜி வழிபட்டு இருப்பது போல் ஒரு படமும், 167 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி சிவாஜி இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றார் என்ற வரைபடத்துடன் எழுதி வைத்த ஒரு படம் ஒன்று அமைந்திருக்கிறது. ஆனால் சத்திரபதி சிவாஜி மாறுவேடத்தில் இந்த கோவிலுக்கு வந்ததால் வரலாற்றில் எந்தவித குறிப்புகளும் இடம் பிடிக்கவில்லை என்று பலர் கூறி வருகின்றனர்.
மேலும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வோருக்கு பில்லி, சூனியங்கள் தொல்லை நீங்கும் என கூறப்படுகிறது.. அது மட்டுமில்லாமல் இந்த கோவிலில் உள்ள சக்கரம் தான் அந்த சக்திக்கு காரணம் என கூறுகின்றனர் அந்த சக்கரத்தை பற்றிய மர்மம் இன்னும் விளங்காமலே உள்ளது... முக்தி அடைய வேண்டும் என்று உலகில் பல மூளைகளில் உள்ள கோவில்களுக்கு அலைந்து செல்பவர்களுக்கு இந்த காளியம்மாள் கோவில் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. மனிதர்கள் தங்களின் ஆசைகளை துறந்து முக்தி அடைய வேண்டும் என்று நினைத்தால் இந்தக் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்!!