
இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி வெளியிடப்படும் மீண்டும் மோடி தலைமையாயிலான பாஜக அரசு தான் அமையும் என அனைத்து தரப்பிலிருந்தும் கூறப்படுகிறது. மேலும் அமைச்சர்கள் தேர்வு பணியில் பா.ஜ.க மும்முரமாக இறங்கியுள்ளது.
தேர்தல் முடிந்த கையோடு தேசிய தலைவர் ஜே.பி. நாட்டவின் பதவிக்காலம் முடிவடைகிறது. பின் பாஜகவின் தேசிய தலைவராக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் வளர்ப்பு தான் தேவந்திர பட்னாவிஸ் மோகன் பகவதின் ஆசி பெற்றவர் என்பதால் இவர் பெயர் தான் லிஸ்டில் முன்னணியில் உள்ளதாம்.
ஒருபக்கம் கட்சியில் மறுபக்கம் ஆட்சியில் அமைச்சர்கள் குறித்து ஆலோசனை என இப்போதிலிருந்தே வேலை செய்ய ஆரம்பித்துள்ளது பா.ஜ.க. இது ஒருபுறம் இருக்க மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்ததும், முக்கியமான, மிகப்பெரிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு செய்வதற்கான, 125 நாள் செயல் திட்டம் தயாராக உள்ளது.ஒரு நாள் கூட வீணாக்காமல் இந்த செயல் திட்டம் அமல் செய்யப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
125 நாள் செயல்திட்டத்தில் உற்பத்தி துறைகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்துவது மேலும் கோவில்கள் பாதுகாப்பு விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பது உள்ளிட்டவை அடங்கும். மேலும் ஓரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், உள்ளிட்ட சட்டங்களும் இதில் அடங்கும் இந்த நிலையில் தமிழகத்திற்காக என்ன திட்டம் மோடி வகுத்துள்ளார் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் டெல்லியிலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் பாதுகாப்பு விஷயமும் இந்து கோவில்களை பாதுகாப்பது குறித்துதான் அந்த திட்டம்.
தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதன் ரிப்போர்ட் மோடியின் டேபிளுக்கு சென்றுள்ளதாம், அதன் அடிப்படையில் தமிழகத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து மோடியிடம் ஆலோசனையும் நடைபெற்றுள்ளதாம்.தேர்தல் ரிசல்ட் வந்தவுடன் பாதுகாப்பு விஷயத்தில் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என மோடி கூறிவிட்டார்.
மேலும் தமிழகத்தில் யாரெல்லாம் பயங்கரவாத கும்பல்களுடன் தொடர்பில் இருந்தாலும் அவர்களை தட்டி தூக்க உத்தரவிட்டுள்ளர்களாம். இதனை தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை கொண்டு மதமாற்றம் செய்யும் வேளைகளில் ஈடுபடுவோர் தேசத்தை குறித்து தவறாக சித்தரிக்கும் திரை பிரபாலங்கள் முதல் யூடுபர் வரை கஞ்சா கடத்தலில் தொடர்புடைய அரசியல்வாதிகள் என அனைவரின் லிஸ்ட் தயாராகி உள்ளதாம். மேலும் கைது நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் நடக்க உள்ளது. ஆபரேஷன் தமிழ்நாடு என்ற பெயரில் நூறு நாட்களில் பல சம்பவங்கள் நடைபெற உள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றது.
அதுமட்டுமில்லாமல் இந்து கோவில்களின் சொத்துகள் எவ்வளவு என்ற லிஸ்டையும் அதன் மூலம் அரசின் வருவாய் எவ்வளவு என்பதையும் மோடி கேட்டுள்ளாராம். அதன் தரவுகள் அனைத்தும் மோடியின் டேபிளுக்கு சென்றுள்ளது. பழமையான கோவில்களை பாதுக்காக்கவும் சட்டம் இயற்றப்பட உள்ளதாம். கோவிலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த பகுதிகளால் என்ன செய்யலாம் எனவும் திட்டம் தயாராகி வருகிறது.
அதனை தொடர்ந்து இந்து கோவில் நிலங்களில் உள்ள கடைகள் அனைத்தும் ஏழை எளிய இந்துக்களுக்கு குறைந்த வாடைகைக்கு விடுவது, ஆக்கிரமிப்பு சொத்துக்களை பறிமுதல் செய்து கோவிலுக்கு தேவையான கார் பார்க்கிங், குளம் அமைப்பது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என திட்டங்கள் உள்ளதாம். அரசியல்வாதிகள் மேல் ஊழல் வழக்குகளை அடுத்த ஓராண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வரவும் அதுவரை அவர்களின் சொத்துக்களை முடக்குவதும் ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் சொத்தை பறிமுதல் செய்ய சட்டம் இயற்றவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் ஆட்சிமாற்றமும் ஏற்படலாம். இந்து தெய்வங்கள் குறித்து பொதுவெளியில் தவறாக பேசிய அனைவரின் வீடியோவும் வழக்குகள் பதிய ரெடியாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றது. அதுமட்டுமில்லாமல் கஞ்சா வழக்கு, தேசத்துரோக வழக்குகளை 100 நாட்களுக்குள் வழக்குகளை முடிக்கவேண்டும் அதற்கான ஆதாரங்களை ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள் என உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.