2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தனது பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் 2024 லோக்சபா தேர்தல் தற்போது ஏழு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதில் இறுதி கட்ட தேர்தல் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக தமிழகத்தில் முதல் கட்டமாகவே தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது.
தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியானதற்கு பிறகு தமிழகத்தில் தான் முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் லோக்சபா தேர்தலுக்கான பரபரப்பும் அங்கிருந்து ஆரம்பித்தது ஆரம்பித்த சில நாட்களிலேயே பரபரப்பான ஒரு சூழ்நிலையை தமிழக அரசியல் கண்டது மேலும் பாஜகவின் கூட்டணியில் யாரும் இணைய மாட்டார்கள் அதிமுகவின் கூட்டணியில் இல்லாமல் இந்த முறை பாஜக திணறப்போகிறது என்ற கருத்துக்களை கூறி வந்த திமுக தரப்பினர் பெரும் ஏமாற்றம் ஏற்படும் வகையில் அமமுக, பாமக என முக்கிய கட்சிகள் கூட்டினியில் இணைந்தது அதிலும் குறிப்பாக நடிகரும் அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவராக இருந்து வந்த சரத்குமார் தனது கட்சி முழுவதுமே பாஜகவுடன் இணைத்து கொண்டதும் அரசியல் வட்டாரம் முழுவதும் கவனம் பெற்றது.
இது அனைத்திற்கும் மாநில தலைவர் அண்ணாமலையின் சிறிய பேச்சு மற்றும் அவர் அடுத்தடுத்து முன்வைக்கின்ற நடவடிக்கைகள் கட்சியை வளர்க்க மேற்கொள்ளும் திட்டங்கள் அதன் மூலம் மக்களுக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வரலாம், மத்திய அரசின் திட்டங்களை எப்படி தமிழக மக்கள் அனைவரையுமே பயனாளிகள் ஆக்குவது என்ற சீரிய முயற்சிகளை மேற்கொள்வது நடுத்தர மற்றும் ஏழை எளிய வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரையுமே கவர்ந்து இழுத்தது.
அதிலும் குறிப்பாக அவர் நன்கு படித்த ஒரு அரசியல்வாதியாக இருப்பதும் வேறு இளைஞர்களை அதிகமாக அண்ணாமலை பக்கம் ஈர்க்கிறது. அதனால் பாஜகவின் வாக்கு வங்கியும் கடந்த லோக்சபா தேர்தலில் அதிகரித்திருப்பதாக பத்திரிகையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு மற்றும் பல நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பிலும் கூறப்பட்டது. பெரும் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு திமுக கடுமையான எதிர்ப்புகளையும் அந்த பிரச்சாரத்தில் சந்தித்து முட்டி மோதி பிரச்சாரத்தை முடித்தது.
அதே சமயம், தேர்தல் முடிந்ததும் அப்பாடா ஒரு பெரிய வேலை முடிஞ்சிருச்சு என தமிழகத்தில் இருந்த திமுக, அதிமுக கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ரிலாக்ஸ் ஆக ஜாலி டூர் சென்றுவிட்டனர். ஆனால் தமிழக பாஜகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் மற்ற மாநிலங்களில் நடக்கின்ற லோக்சபா தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி கட்சிக் குள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பரபரப்பாக சைலன்டாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது அதாவது எலக்சன் ரிசல்ட் வருவதற்கு முன்பாகவே கட்சியில் சில மாறுதல்கள் நடைபெற உள்ளதாகவும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் களில் திறம்பட செயலாற்றாதவர்களின் பட்டியலை அண்ணாமலை தயாரிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தேசிய தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தவுடன் தமிழகம் திரும்பும் அண்ணாமலை ஃபுல் பிளான்னோடு புதிய இரத்தங்களை கட்சிக்குள் இணைத்து பாய்ச்ச உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே பாஜகவில் புதிய உறுப்பினர்கள் அல்லது நிர்வாகிகளின் மாற்றம் புதிய நியமனங்கள் பல நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.