
கடந்த பிப்ரவரி மாதம் கிட்டத்தட்ட 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் டெல்லியில் ஒரு கும்பல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருந்ததை மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியதை அடுத்து அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ஜாபர் சாதிக் என்ற திமுக நிர்வாகியையும் கைது செய்தது. அதோடு ஜாபர் சாதிக்கை திமுக தனது கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கியதாக அறிவித்தது அது மட்டும் இன்றி ஜாபர் சாதிக்கின் வீட்டில் அதிகாரிகள் சோதனை இட்ட பொழுது ஜாபர் சாதிக் உடன் பல சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் அதிக நெருக்கம் காட்டி உள்ளனர் என்பதும் ஜாபர் சாதிக் பல போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார் என்பதும் ஜாபர் சாதிக் பல போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
அதோடு ஜாபர் சாதிக் சினிமா துறையில் தயாரிப்பாளராகவும் பிரபலமாகியுள்ளார் என்பதும் அவரது தயாரிப்பில் இரண்டு மூன்று படங்கள் வெளியாகி இருப்பதும் மங்கை என்ற திரைப்படமும் வெளியாகி இருப்பதையும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர். அதுமட்டுமின்றி ஜாஃபருடன் தமிழ் திரை உலக சேர்ந்த நடிகரும் இயக்குனருமான அமீருக்கு நெருங்கி தொடர்பு உள்ளது எனவும் இருவரும் சேர்ந்து அதிக தொழில்களை தொடங்கி உள்ளனர் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர் அதற்கு ஏற்றார் போல் இருவருக்கும் இடையிலான வியாபார தொடர்பு நீண்டு கொண்டே சென்றது. அதனால் அமீரையும் டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக் தமிழகத்தில் ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு முதல்வருடனும் முதலமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் உடலும் அதிக நெருக்கம் காட்டி வந்ததோடு தமிழகத்தில் ஒரு போதைப்பொருள் உற்பத்தியின் சாம்ராஜியத்தையே உருவாக்கி வெளிநாடுகளுக்கு கடத்தி வந்துள்ளார் என்பது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மேலும் டெல்லி போலீஸ்ஸிடம் சிக்கிய ஜாபர், தான் போதை பொருள் கடத்தலில் பெற்ற பணம் முழுவதையும் சினிமா துறையில் தான் கொட்டி உள்ளதாக கூறியது வேறு சினிமா வட்டாரத்தையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கு இந்த விவகாரத்தில் அமலாக்க துறையும் இறங்கி அவ்வப்போது தங்களது சோதனை வேட்டைகளை தொடர்ந்து வந்தது. மேலும் தற்போது இதில் அமலாக்கத்துறை ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் அதற்கு ஏற்றார் போல் ஜாபர் சாதிக்கும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது திகார் சிறையில் உள்ள நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றமும் இதில் நிகழ்ந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை வைத்து அமலாக்கத் துறையும் வழக்குப்பதிந்துள்ளது. அதனால் ஜாபர் சாதி உள்ளிட்ட ஐந்து பேருடன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு சமர்ப்பித்திருந்தது அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அமலாக்க துறைக்கு அனுமதி அளித்தது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கு உள்ளிட்ட ஐந்து பேரிடம் அமலாக்கத்துறை தனது விசாரணையை மூன்று நாட்களாக தொடங்கிய நிலையில் ஜாபர் சாதிக் அப்ரூவராக மாற அதிக வாய்ப்புள்ளதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஜாபர் சாதிக் மட்டும் அப்ரூவராக மாறிவிட்டால் இதற்கு பின்னால் இருப்பவர்கள் யார் யார் என்பதும் வெளிச்சத்திற்கு வரும்! அதோடு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.