தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பல வெற்றி தோல்வி திரைப்படங்களையும் சந்தித்து இன்று ஒரு பிரபல நடிகராகவும் அதிக அளவில் சம்பளம் வாங்கும் ஒரு முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். முதலில் அதிக அளவில் வரவேற்பை பெறாமல் இருந்த விஜய் அதன் பிறகு தனது கடின உழைப்பால் தனது திறமையை வளர்த்துக் கொண்டு இன்று ஒரு முன்னணி நடிகராக இருந்து வருகிறார். மேலும் 65 திரைப்படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்து சினிமா உலகத்தையே கலக்கிக் கொண்டு வருகிறார். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடிகர் விஜய்க்கு என்று ஒரு தனி கூட்டமே ரசிகர்களாக இருந்து வருகின்றனர். விஜயின் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே ஒரு திருவிழா போல தான் கொண்டாடி வருகின்றனர்.
இந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்து வந்த விஜய் தற்போது அரசியலில் நுழைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தப் போவதாகவும் கடைசியாக இரண்டே திரைப்படங்கள் மட்டும் நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார். தற்போது அந்த திரைப்படத்தின் ஒன்றாக கோட் திரைப்படத்தின் சூட்டிங் வேலைகள் நடந்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் கட்சியினை ஆரம்பித்துள்ளார். இந்தக் கட்சியில் தற்போது உறுப்பினர்களை சேர்க்கும் வேலையும் நடந்து கொண்டுள்ளது. மேலும் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது நற்பணி மன்றத்தை பயன்படுத்தி பல நல்ல விஷயங்களை தொடர்ந்து மக்களுக்கு செய்து வந்தார். மழை நிவாரண உதவி வழங்குவது மற்றும் மாணவர்களுக்கு தூக்கத்தொகை வழங்குவது போன்ற பல உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் அவரின் ரசிகர்களும் இதனை கொண்டாடியும் வருகின்றனர் மேலும் அவரின் ரசிகர்கள் தொடர்ந்து கட்சியில் உறுப்பினராகவும் சேர்ந்து வருகின்றனர். இவ்வாறு விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை பொதுமக்கள் வரவேற்பது மட்டுமல்லாமல் திரையுலகத்தில் உள்ள சில நடிகர்களும் வரவேற்று வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து தற்போது எடுக்கப்படும் பேட்டிகளில் தொடர்ச்சியாக பிரபலங்களிடம் விஜய் அரசியலுக்கு வந்ததைப் பற்றி கருத்துக்கள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு பிரபல நடிகரிடம் ஒரு பிரச்சாரத்தின் போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது!! அதற்கு அந்தப் பிரபலம் கூறி இருக்கும் பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!! அந்தக் பிரபலம் யார்?? அவர் என்ன திரைப்படத்தில் நடித்தார்?? மற்றும் அவர் கூறிய பதில் என்ன?? என்பதை பற்றி விரிவாக காணலாம்!!
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் செயலர் திரைப்படத்தில் நடித்த நடிகர் சிவகுமாரிடம் விஜய் அரசியலுக்கு வந்ததை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய்யின் பேச்சை கேட்டுள்ளேன்!! விஜய்யின் ஐடியாவும் விஷனும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது!! அவரின் பேச்சை கேட்கும் பொழுதும் அவரை பார்க்கும் பொழுதும் உண்மையாக இருக்கிறார் என்று தோன்றுகிறது. அதனால் விஜயின் நோக்கம் மிகவும் நன்றாக உள்ளது என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார். இவ்வாறு இவர் கூறியிருக்கும் பதில் தற்போது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் மேலும் விஜயின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.இதுமட்டுமில்லாமல் விஜய் தரப்பு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் உள்ள நடிகர்களுக்கு தூது விட்டதாகவும் அரசியல் வருகை குறித்து பேசுவதற்கு அந்த மாநில நடிகர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் வேறு சில விமர்சனங்களை முன்வைக்கின்றனர் விவரமறிந்தவர்கள்...