சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 221 வது நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருந்து போர் குரல் எழுமிய முக்கிய வீரர்களில் மாவீரர் மருது சகோதரர்களின் பங்கு முக்கியமாகும். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
மருது சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட அக்டோபர் 24ம் தேதி அரசு விழாவாக வருடம்தோறும் அனுசரிக்கப்படும் நிலையில், இந்த விழாவை அனுசரிக்க அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், கோகுல இந்திரா, விஜய பாஸ்கர், ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து சமுதாய மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். குருபூஜை விழாவில் மதுரை ஆதீனம் மருது பாண்டியர்களின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சி பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருது பாண்டிய சகோதரர்களின் 222ம் ஆண்டு நினைவு விழாவிற்கு என்று பேசும்போது, அருகில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஜெயந்தி விழா என்று கூறினார். அதனை அப்படியே சிந்திக்காமல் திண்டுக்கல் சீனிவாசனும் பேசினார். இதனை பார்க்கும்போது சினிமா பாணியில் அய்யோ பாவம் அவரே கன்பியூசன் ஆகிட்டாரே என்ற வடிவேல் நகைச்சுவை போல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தற்போது செய்தியாளர்களிடம் பேசி வருகின்றனர்.
அதன் பிறகு செய்தியாளர் இது நினைவு நாளா? அல்லது ஜெயந்தி விழாவா? என்று கேட்டார் அப்போது திண்டுக்கல் சீனிவாசன் நினைவு நாள் என்று கூறினார். இப்படி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எந்த விழாவிற்கு வந்தோம் என்று தெரியாமல் இருக்கும்போது, அருகில் இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கும் இது என்ன விழா என்று தெரியாமல் முழி பிதுங்கி நின்றனர். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தொடர்பான காணொளி சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.