தமிழகத்தில் திமுக அரசு அனைத்து இடங்களிலும் தனது முகாந்திரத்தை நிரப்ப முனைப்புடன் செயல்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும் சென்னை மெரினா கடற்கரையில் பேணா நினைவு சினத்தை பொருத்தவும் பல இடத்தில் கலைஞர் அவர்களின் உருவ சிலையை நிறுவ செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலைஞர் அவர்களின் சிலையை நிறுவவதற்காக தொழிலதிபத்தில் இடத்தை அபகரிக்க திமுகவை சேர்ந்தவர்கள் மிரட்டியதால் அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்தது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஏற்காடு சாலையில் உள்ளது மாடர்ன் தியேட்டர்ஸ்.இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் 150க்கு மேற்பட்ட படங்கள் தயாரித்துள்ளது. 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் தான் மாடர்ன் தியேட்டர்ஸ். தென்னிந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக்கூடம். ஏற்காடு மலை பகுதியின் கீழ் இந்த மாடர்ன் தியேட்டரின் ஆர்ச் உள்ளது சமீபத்தில் பல்வேறு நிகழ்ச்சிக்காக சேலம் வந்த முதலமைச்சர் முக. ஸ்டாலின் அந்த ஆர்ச் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டார். தற்போது அங்கு இருந்து தான் பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது அந்த ஆர்ச் பகுதியில் கலைஞர் சிலை வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அந்த இடத்தின் உரிமையாளர்களை அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.
இதுவரை அந்த இடத்திற்கு எந்த வித ஒப்புதல் தராமல் உரிமையாளர்கள் மவுனம் காத்து வந்ததால், அந்த உரிமையாளர் மற்றொரு இடத்தில் கட்டுமான பானைகளை மேற்கொண்டு வந்துள்ளார் அது அரசின் நிலம் என கூறி காவலர்கள் மற்றும் திமுகவினர் அந்த கட்டுமான பணிகளை இடித்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு நெருக்கடி கொடுத்ததால் அவர்கள் நீதிமன்றத்தில் புகார் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
'திமுக தலைவர் கருணாநிதி பணிபுரிந்த இடங்களில் எல்லாம் அவரது சிலையை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்? பாரம்பரியமிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை உருவாக்கி, திமுக தலைவர் மறைந்த கருணாநிதி அவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கி வாழ்வளித்த அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியார் அவர்கள் இடத்தையே ஆக்கிரமித்து, தனது சிலை வைப்பதை, கருணாநிதி அவர்களே ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமே. வேண்டுமென்றால், அறிவாலயத்திலோ, திமுகவினர் நடத்தும் பல்லாயிரக் கணக்கான நிறுவன வளாகங்களிலோ, ஆசை தீர தன் தந்தையின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்துக் கொள்ளலாமே? யார் அதைக் கேள்வி கேட்கப் போகிறார்கள்?
பாரம்பரியமிக்க குடும்பத்தின் சொத்தை ஆக்கிரமித்துத்தான், முதலமைச்சர் ஸ்டாலின் தன் தந்தையின் சிலையை வைக்க வேண்டுமா? நாளை, மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர் கருணாநிதி என்று நிறுவ முயற்சியா? நில ஆக்கிரமிப்பு திமுகவின் என்பது பாரம்பரியமாக இருக்கலாம். ஆனால், இனியும் அது செல்லுபடியாகாது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்க வேண்டும்'. என தெரிவித்திருந்தார். மேலும், கலைஞர் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் கூட இப்படி மக்களை வஞ்சிஇருக்கமாட்டார் தனக்கெதுக்கு பேனா, தனக்கெதுக்கு உருவ சிலை என கேட்டிருப்பார். ஆனால், முதலமைச்சர் எதற்காக இப்படி கீழ் தரமாக செயல்படுகிறார் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
திமுக ஆட்சி என்றாலே சட்டம் ஒழுங்கு தலைகீழாக தான் செயல்படும் என்பதற்கு இது தான் உதாரணம் எனவும் கூறிவருகின்றனர். அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அந்த இடத்தை வேண்டாம் என்று முடிவு எடுத்திவிட்டதாக அறிவாலயத்தில் இருந்து சில தகவல்களை கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கூறுகையில், நாங்கள் அந்த ஆர்ச் பகுதியை அரசிடம் ஒப்படைக்க கலந்து ஆலோசித்து வருகிறோம் அதற்குள் திமுகவினர் இப்படி ஆராஜாக்கட்டத்தில் ஈடுபடுவது நியாயமல்ல இதற்கு முதலமைச்சர் தான் தலையிட்டு எங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.