கார்த்திக் சுப்பராஜ் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், இவர் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பணியிலும் செயல்படுத்தி வருகிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகனாக இருந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படத்தையும் இயக்கியுள்ளார் அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் ஜிகர்தண்டா படத்தை இயக்க நினைத்த கார்த்திக் சுப்புராஜ் அதற்கு போதிய நிதி தேவைப்பட்டதால் பீட்ஸா படத்தை இயக்கினார் அந்த படம் வணிக ரீதியாகவும் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தனது திரைப்பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.
2014ம் ஆண்டு தயாரித்த படம் ஜிகர்தண்டா இந்த படம் வலியாகி ஆஸ்கர் அவார்ட் குவித்தது மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது அதன் பிறகு தான் பாபி சிம்ஹா சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை தயாரிக்க கார்த்திக் சுப்புராஜிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ரசிகர்களின் மகிழ்ச்சிக்கேற்ப இரண்டாம் பாகத்தை நடத்த திட்டமிட்ட அவர் முதல் பாகத்தில் நடித்தவர்களை நீக்கிவிட்டு புதிய முகமாக ராகவா லாரென்ஸ் மற்றும் sj சூர்யா உள்ளிட்ட இருவரை நடிகர்களாக அறிமுகம் செய்து ரஜினிகாந்த் மற்றும் ஹாலிவுட் நடிகரான கிளிண்ட்டை மையமாக வைத்து தயாரித்த படம் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் படம் ஒடிடி தளத்திற்கும் வந்து மிக பெரிய வெற்றியை நோக்கி சென்றுள்ளது, இந்தப் படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து இணையவாசி ஒருவர் பிரபல ஹாலிவுட் நடிகரான கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை டேக் செய்து ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் ‘ஹாய் கிளிண்ட். நாங்கள் இந்தியன். ஒரு இந்திய படத்தை உருவாக்கியுள்ளோம். அதன் பெயர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். அந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.அந்த முழுப்படத்தையும் உங்களுக்காக சமர்ப்பிக்கிறோம். உங்கள் இளம் வயதில் உங்களைப் போன்ற சில அனிமேஷன் காட்சிகளை இந்தப் படத்தில் நாங்கள் செய்துள்ளோம். நேரம் கிடைத்தால் அந்தப் படத்தை பாருங்கள்.’ என்று பதிவிட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அலுவலக கணக்கிலிருந்து ‘ஹாய். கிளிண்ட் அந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார். அவருடைய ஒரு புதிய படத்தில் பிஸியாக இருப்பதால் அது முடிந்ததும் ஜிகர்தண்டா படத்தை பார்க்க இருக்கிறார்’ என்று ரிப்ளே வந்துள்ளது. இதைப் பார்த்ததும் கார்த்திக் சுப்பாராஜ் மிகவும் சந்தோஷத்துடன் எப்பேற்பட்ட ஒரு லெஜெண்ட்? எனக்கு பேச்சே வரவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தியாவில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சார்பாக இந்தப் படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன். அந்தப் படத்தை பார்த்துவிட்டு அவருடைய மனதில் என்ன நினைக்கிறார் என்பதை அறிய எனக்கு ஆர்வமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தை அவர் காதுக்கு கொண்டு சென்ற அந்த ரசிகருக்கும் என் மனதார நன்றி என பதிவிட்டிருக்கிறார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தொடங்கியதும் ராகவா லாரென்ஸ் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் தனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்திருக்கும் வகையில் காட்சிகள் தொடங்கும், படம் முழுக்க அதிரடியாக சென்றிருக்கும் குறிப்பாக இரண்டாம் பாகமும் ஆஸ்கார் வெற்றி பெரும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பிலும் மற்றும் இயக்கத்திலும் வெளியான படங்கள் ஏதும் நெகட்டிவ் விமர்சனத்தை பெறாமல் பாசிட்டிவ்வாகவே விமர்சனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.