Cinema

நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வடிவேலு..! ப்ளு சட்டை மாறன் விளாசல் !

Vadivelu
Vadivelu

நடிகர் வடிவேலு குறித்து தான் அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் விஜயகாந்த் மறைவிற்கு வடிவேலு வராத பொது எழுந்த விமர்சனம் இன்று வரை அலைக்கடலாக ஓய்வெடுக்காமல் இணையத்திலும் சினிமா துறையை சேர்ந்தவர்களும் வடிவேலு குறித்து பல தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது வடிவேலு மூலம் ஒரு சிக்கலில் சிக்கியதை திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன் இணையத்தில் பதிவிட்டுள்ளார். 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 என்ற பெயரில் தமிழ் திரையுலக சங்கம் ஏற்பாடு செய்திருந்த்தது. இந்த விழாவை கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி நடந்த திட்டம் போட்டனர். அப்போது தென்மாவட்டங்களில் பொழிந்த கனமழையின் காரணமாகவும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளில் இந்த விழா நடத்தக்கூடாது என அதிமுகவினர் கேட்டு கொண்டதன் காரணமாகவும் ஒத்திவைத்தனர். மேலும், டிச.,24 அன்று திமுக இளைஞரணி  மாநாடும் அறிவித்திருந்த நிலையில், அப்போது கனமழையின் காரணமாக இரண்டு விழாக்களும் ஒத்திவைத்தனர். அதன் படி சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. 

இந்த விழாவில் தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து நடிகர்கள், நடிகைகள் மட்டும் இயக்குனர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். இதில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ளுவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அப்படி யாரும் ரஜினி, கமல் போன்றவர்களை தவிர யாரும் கலந்துகொள்ளவில்லை இதனால் அரங்கம் நிரம்பாமல் வெறிச்சோடி இருந்தது. இதில் கலந்துகொள்ள வரும் நடிகர்களை விழாமேடைக்கு கார் பார்க்கிங்கில் இருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரையுலகினர் அழைத்து செல்லப்பட்டனர். ஆளுக்கு ஒரு பேட்டரி கார் வருமென நினைத்திருந்தார்கள். ஆனால் ஏற்கனவே சோனியா அகர்வால் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே நயன்தாரா அமர வைக்கப்பட்டதால்..அப்செட் ஆனார் அவர்.

அடுத்து வடிவேலு வந்தார். பேட்டரி காரில் ராஜ்கிரணுக்கு அருகே அமர்வோம் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் கடுப்பான வடிவேலு... உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார். ராஜ்கிரணை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. அதன்பிறகு வந்த பேட்டரி காரில் டிரைவருக்கு அருகே அமர்ந்து விழா மேடைக்கு சென்றார். நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் கைத்தட்டல் வாங்க ஒத்திகை பார்த்துவிட்டு வந்தவருக்கு... அந்த வாய்ப்பு அமையாமல் போனதால் அதிருப்தி அடைந்தார். வடிவேலுவின் வளர்ச்சிக்கு வாய்ப்பு அளித்தவர்கள்  ராஜ்கிரணும், கேப்டன் விஜயகாந்த். டி.ராஜேந்திரன் 'என் தங்கை கல்யாணி' படத்தில் அறிமுகமாகி அதில் சில நொடிகள் நடித்தார். 

அதன்பிறகு முறைப்படி அவரை அழைத்து காமடி கேரக்டரும், ஒரு பாடல் காட்சியும் அளித்து உதவியவர் ராஜ்கிரண். அடுத்து சின்னக்கவுண்டர் படத்தில் வாய்ப்பு தந்தார் விஜயகாந்த். என் ராசாவின் மனசில், சின்னக்கவுண்டர் படங்களில் ஏற்கனவே கவுண்டமணி, செந்தில் போன்ற காமெடியன்கள் இருக்கும்போது இவர் எதற்கு என மற்றவர்கள் கூறியும் 'பரவாயில்லை. திறமைசாலி. வாய்ப்பு அளிக்கலாம்' எனக்கூறி கைதூக்கி விட்டார்கள் ராஜ்கிரணும், கேப்டனும். தனக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை கூட  பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார் வடிவேலு என ப்ளு சட்டை மாறன் இணயத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இது வரை விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்காமல் இருக்கும் வடிவேல் மீது குற்றசாட்டு வலுத்து வருகிறது.