தென்னாப்பிரிக்காவில் பிறந்து உலகின் இரண்டாவது பணக்காரராகவும் சிறுவயதிலிருந்தே பல நிறுவனங்களின் தொடங்கி அவற்றை பல மடங்கிற்கு விற்று மிக முக்கிய அமெரிக்க தொழிலதிபராகவும் கண்டுபிடிப்பாளராகவும் முதலீட்டாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் எலன் மாஸ்க், மேலும் இவர் உலகின் மிக முக்கிய நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனராகவும் உள்ளார். இவரது குடும்பத்தில் இவர் மட்டுமின்றி இவரது சகோதரர் சகோதரி தாய் தந்தை என அனைவருமே சாதனையாளர்களாக இருந்துள்ளனர். சிறுவயதில் இருந்து புத்தகப் புழுவாக இருந்த எலன் மாஸ்க் அமெரிக்காவில் குடி பெயர்ந்த பிறகு கல்லூரி படிப்பை படித்துக் கொண்டே ஜிப்2 என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
பிறகு அந்த நிறுவனம் பல மடங்கிற்கு விற்பனையாகி 180 டாலர் மதிப்பிலான பங்குகளுக்கு சொந்தக்காரரானார் எலன் மாஸ். இதைத்தவிர ஹைபர் லூப் என்னும் புதிய திட்டத்தை முன்வைத்து அதன்படி பெருநகரங்களிடையே மிக விரைவில் பயணம் செய்யக்கூடிய நோக்கத்தில் குறைந்த அழுத்த குழாய்கள் வழியாக ஒரு மணி நேரத்தில் 700 மைல்கள் வரை செல்லும் ஒரு கண்டுபிடிப்பில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இது மட்டுமின்றி ஏ ஐ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தையும் பொறுப்பேற்று அதற்கென தனி ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வருகிறார். எலன் மாஸ்க் தனது தொழிலிலும் ஆராய்ச்சியிலும் படு பிஸியாக இருந்து கொண்டு சமூக வலைத்தளத்திலும் சில நேரங்களில் சில பதிவுகளை இட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டே வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் எலன் மாஸ்க் தமிழ் வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பாராட்டி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பலரின் கவனத்தை பெற்றதோடு யார் அந்த தமிழ் இளைஞர் என்ற ஒரு தேடலையும் ஏற்படுத்த தொடங்கியுள்ளது!! அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் ஆட்டோ பைலட் என்கின்ற தானியங்கி ஓட்டுனர் தொழில்நுட்ப குழுவை எலன் மாஸ்க் அமைத்துள்ளார். அப்பொழுது அந்த குழுவின் பொறியாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்றுள்ளது. அந்தப் பணியில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த அசோக் எல்லுச்சாமி என்கின்ற நபர் முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டில் அசோக் எல்லுச்சாமி ஆட்டோ பைலட் சாஃப்ட்வேர் குழுவின் தலைமை பொறுப்பிற்கு பணியமர்த்தப்பட்டார். இந்த நிலையில் தான், அசோக் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டெஸ்லா நிறுவனத்தில் தானியங்கி கார்களுக்கான சாஃப்ட்வேரை உருவாக்கும் பிரிவில் எலன்மாஸ்கின் பங்கு குறித்தும் அவரது பங்கு இந்த பிரிவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த எலன் மாஸ்க் அசோக்கின் கட்டுரையை மேற்கோள் காட்டியதோடு டெஸ்லாவின் ஆட்டோ பைலட் பிரிவிற்கு அசோக்கின் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனக் கூறி அசோக்கிற்கு நன்றி தெரிவித்ததோடு அவரது குழுவையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இது பெரும் வைரலாகி யார் அந்த அசோக் என்ற தேடலை தீவிர படுத்தியது. சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற அசோக் எல்லுச்சாமி அமெரிக்கா சென்று பென்சில்வேனியா மாகாணத்தில் பீட்டர்ஸ் பார்க் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் ரோபட்டிக் சிஸ்டம் பிரிவில் முதுகலை பட்டத்தையும் முடித்து அதன் பிறகு எலன்மாஸ்கிங் தானியங்கி ஓட்டுனர் தொழில்நுட்பக் குழுவில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.