புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, அதன் முதல்வராக என் ஆர் காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமியும் மற்ற நான்கு அமைச்சர்களும் இருக்கிறார்கள். இந்த நால்வரில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்திர பிரியங்கா என்பவர் புதுச்சேரியின் ஒரே ஒரு பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர். போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டு வசதி, தொழிலாளர் நலன்,வேலைவாய்ப்பு, கலை, பண்பாடு, பொருளாதார மற்றும் புள்ளியியல் போன்ற துறைகளை தன்னிடம் வைத்துள்ளார் சந்திரபிரியங்கா, இப்படி பெரும்பான்மையான பொறுப்புகளை தன்னிடம் வைத்துக் கொண்டு மக்களுக்கு பணியாற்றி வந்த இவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்தார் அந்த அறிக்கையில், 'நான் இந்த கடிதத்தை என்னை சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கி உள்ள நிலையில் எழுதுகிறேன் என் மனதிருப்தி உடனும் மக்களின் ஆதரவுடன் ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக மாநில அமைச்சராகவும் எனது பணிகளை இந்த நிமிடம் வரை ஓயாமல் நான் செய்து வருகிறேன் பொதுவாக தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடுவார்கள் என்று தான் கூறுவார்கள், ஆனால் கடின உழைப்பும் மன தைரியமும் இருந்தால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் களத்தில் செயல்பட முடியும் என்பதற்கான பல முன்னுதாரணங்களை பின்பற்றி களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு இரவு பகலாக உழைத்து வருகிறேன், ஆனால் சூழ்ச்சி அரசியலாலும் பணம் என்ற பெரிய பூதத்தின் முன் போராடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல இதனை தற்போது நான் உணர்ந்து கொண்டேன்.
தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உல்லாவதாக உணர்ந்ததோடு சொந்த பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதழும் நாகரிகம் அல்ல ஆனால் தொடர்ந்து நான் குறி வைக்கப்பட்டு வருகிறேன். ஒரு கட்டத்திற்கு மேல் எதையும் பொறுத்துக் கொள்ள முடியாது அல்லவா அதனால் தற்போது இந்த முடிவு' என்று தெரிவித்து இந்த ராஜினாமா கடிதத்தை எழுதியதாகவும், ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கும் கவர்னருக்கும் அனுப்பி வைத்துள்ளார் சந்திர பிரியங்கா. இந்த நிலையில் இந்த ராஜினாமா விவகாரத்தில் திடீர் திருப்பமாக சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது அனைத்தும் நாடகம் என கூறி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை கூறும்போது, 'சகோதரி சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது மேலும் அவர் இதற்காக அவர் என்னை சந்தித்திருந்தால் அதைப்பற்றி ஒரு பெண் துணை நிலை ஆளுநரான என்னிடம் சொல்லி இருக்கலாம், ஆனால் ஒரு நாளும் அவர் இதைப் பற்றி என்னிடம் கூறியது கிடையாது பெண் ஒருவர் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு இந்த வாய்ப்பளிக்கப்பட்டது.
சந்திர பிரியங்கா இந்த ராஜினாமா கடிதத்தை கொடுப்பதற்கு முன்பாகவே கடந்த ஆறு மாத காலமாக அவரது பணியில் தோய்வு இருப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார் அது குறித்து நடவடிக்கைகளை முதல்வர் விரைவாக எடுப்பதாகவும் கூறினார். இதனால் சந்திர பிரியங்காவின் விவகாரத்தில் ராஜினாமா முதலில் கிடையாது அதற்கு முன்பே அவரது பணி திருப்தியாக இல்லாத காரணத்தினால் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது அது குறித்த நடவடிக்கைகளையும் முதல்வர் எடுத்துள்ளார் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியை சரிவர செய்யவில்லை என்பதை மறைப்பதற்காகவே இந்த ராஜினாமா விவகாரம் என தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்துக்கள் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.