தளபதியின் லியோ படம் பல சர்ச்சைகளை கடந்து வரும் 19ம் தேதி திரைக்கு வரவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஐமேக்ஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. படத்தின் அட்வான்ஸ் புக்கிங்க் நாளை மறுநாள் தொடடங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு பிரபல நடிகர் ஒருவர் நடித்திருப்பதாகவும் இணையத்தில் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.வரும் 19ம் தேதி அட்வான்ஸ் தீபாவளி என்று ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். அதாவது லியோ பான் இந்திய படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளதால், உலகில் உள்ள ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
விஜயின் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் மிதந்து இருக்கிறார்களாம். காரணம் லோகேஷ் கூட்டணியில் படம் நடித்துள்ளதால் ஏற்கனவே மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி லியோ படத்தில் இணைந்ததே அதற்கான மேலு காரணமாம். வரசிசு படம் பொங்கல் அன்று வெளியாகி ரசிகர்களிடம் சராசரியான கருத்தை பெற்றது.லியோ படத்திற்கு ஆடியோ வெளியிட்டு விழா தடை, விஜய் கெட்ட வார்த்தை பேசியது போன்ற பல்வேறு சர்ச்சை எழுந்த நிலையில், சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு படக்குழு மேலும் புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது. அதாவது, லியோ படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சிக்கு தள்ளப்பட்டனர். ஏற்கனவே படக்குழு படத்தின் புரோமோஷன் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் பல வித அப்டேட்டுகளை கொடுத்தனர். இதனால் ஹைப்பில் இருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் இயக்கிய கடைசி படமான விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா ரோலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் படத்தின் கடைசி 10 நிமிடம் மட்டும் வந்து நடித்திருப்பார். அவரது நடிப்பை பார்த்த அனைவரும் அவரை கொண்டாடினர். உலக நாயகன் கமல்ஹாசனை மறந்து விட்டு சூர்யாவை கொண்டாடி தீர்த்தனர். அது போல லியோ படத்தில் "தெலுங்கு நடிகர் ராம்சரண் ஒரு 10 நிமிடங்கள் மட்டும் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை ராம்சரண் இந்த லியோ படத்தில் நடித்திருந்தால், தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். விக்ரமில் ரோலெக்ஸை சஸ்பென்ஸாக வைத்தது போல, ராம்சரண் கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது".
விக்ரமில் சூர்யாவை கொண்டாடியது போல், லியோவில் ராம்சரணை கொண்டாட தொடங்கினாள் அவ்ளோதான் விஜய் மற்றும் மற்ற கதாபாத்திரத்தை மறந்து விடுவார்கள். லோகேஷ் ஏற்கனேவ ராம்சரணை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. "திரை தீப்பிடிக்க வெயிட்டிங்" என்ற ஹேஸ்டேக்கை ரசிகரக்ள் வைரலாக்கி வருகின்றனர். லியோ பட படக்குழுவினர் தற்போது படம் வெற்றி பெற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். இதுவரை லியோ படத்திற்கான புக்கிங் ஓப்பன் ஆகவில்லை, மேலும் காலை 4 மணிக்கு FDFS காட்சி உள்ளதா இல்லையா என்பது தெரியாமலும் குழப்பத்தோடு வலம் வருகின்றனர்.