தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் களம் காண்கிறார். அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த தமிழிசை தற்போது 'அக்கா 1825' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்ளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சென்னையில் மொத்தம் மூன்று மக்களவை தொகுதி அடங்கியுள்து, வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை. இந்த தென் சென்னையை பொறுத்தவரையில், திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுக சார்பில் ஜெயவர்தனன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் தமிழிசை தீவிரமாக களத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.
தமிழிசை சௌந்தரராஜனின் தேர்தல் பிரச்சாரத்தின் உத்தியாக கையில் எடுத்தது, திமுக தென் சென்னைக்கு எதுவுமே செய்யாததால், தாங்கள் செய்த பணிகளை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க முடியவில்லை. அதனால் தான் மோதி அரசை திட்டுவதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களை அதிகமாக கொண்டது தென் சென்னை தொகுதி. ஏராளமான இளைஞர்களுக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள்? நான் நாடாளுமன்ற உறுப்பினரானால், இந்த தொகுதியின் வாகன நெரிசலை குறைக்கவும், இந்த தொகுதியில் உள்ள மீனவ சமூகத்துக்கு தனி அதிகாரம் வழங்கவும் திட்டங்களை அறிவித்துள்ளேன் என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
மக்களும் மாற்றத்தை எதிர்பார்க்கும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், இன்று தென் சென்னை பாராளுமன்ற பகுதி மக்களுக்கு தான் வெற்றி பெற்றதும் செய்யவேண்டிய தொகுப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், பஜாக மூத்த தலைவர்களான சுதாகர் ரெட்டி, நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், தென் சென்னை மக்களிடம் கலந்து ஆலோசனை செய்து தயாரான இந்த அறிக்கையில், 'அக்கா 1825' என்ற பெயரில், தொகுதி மக்களுக்கு 365 நாட்களும் 5 வருடம் உழைத்திடுவேன் என்ற அடிப்படியில் வெளியிட்டுள்ளது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதில் முக்கிய அமசங்களாக: தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்திலும் எம்பி அலுவகம் அமைப்பதாகவும், தென் சென்னையின் முக்கிய பிரச்சனையான போக்குவரத்து நெரிசலை தீர்வு காண்பேன் என்றும் தென் சென்னையில் பணிபுரியும் பெண்களுக்காக மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும். சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தை ஒருங்கிணைத்து தென் சென்னை தொகுதிக்குள் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். பொதுமக்களின் குறைகள் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
மழைக்காலங்களில் மழை நீர் தேங்காத வகையில் ஆறுகளில் தூர்வாரப்பட்டு மழை நீர் செல்லும் வகையில் வழி வகை ஏறப்டுத்தப்படும். மழை காலத்தில் உடனடியாக உதவிக்கு வருவோர் பிரிவு, அசோக் நகர், வேளச்சேரி, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும். மீட்பு படகுகள், மருத்துவப் பொருட்கள், உயர் சக்தி கொண்ட நீரேற்றும் பம்புகள் உருவாக்கப்படும். உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது.
இதன் மூலம் திமுகவின் கோட்டையாக வைத்திருந்த திமுகவுக்கு இனி கனவிலும் கூட எதிர்பார்க்காத நிலையில், பாஜகவுக்கு சாதகமாகும் என்பதில் மாற்றமில்லை. தென் சென்னையை பொருத்தவரையில் தமிழிசைக்கு வெற்றி வாய்ப்பு என்பது அதிகபடியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், ஏற்கெனவே மழை காலத்தில் எம்பியாக இருந்த தமிழச்சி தங்கபாண்டியன் கண்டுகொள்ளவில்லை எண்ணென்று மக்கள் எதிர்பு தெரிவித்தனர். இதனால் மக்கள் பாஜகவையும், பாஜக வேட்பாளரான தமிழிசையும் தேர்ந்தெடுத்து தென் சென்னை பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து தாமரைக்கு வாக்களிக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.