24 special

உயிரை காப்பாற்றினார் தமிழிசை... நெகிழ்ச்சியில் நீயா நானா கோபிநாத்..!

Gopinath, Thamilisai
Gopinath, Thamilisai

விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். தற்போது தொலைக்காட்சியுடன், வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். நீயா நானா நிகழ்ச்சி மூலம் மக்கள் இடத்தில் இடம் பிடித்தவர் கோபிநாத். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் பாராட்டு விழா நடந்தது அதில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார் அப்போது பேசிய கோபிநாத் தமிழிசை குறித்து உருக்கமான தகவலை பகிர்ந்து கொண்டார் இது காண்போரை கண்கலங்க செய்துள்ளது.


விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி மூலம் தற்போது உள்ள இளைஞர்களிடம் ஒரு மோட்டிவேஷன் நபராக இருந்துள்ளார். குறிப்பாக நிகழ்ச்சியில் இரு பக்கமும் நடுநிலைமையோடு பேசுவது மக்களுக்கு பிடித்தவையாக இருக்கும். நிகழ்ச்சி மட்டுமின்றி அவர் நடிக்கும் வெள்ளித்திரை படமும் அதே போல் கருத்து கொண்டவையாக இருக்கும். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு மோட்டிவேஷன் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கோபிநாத்துக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் கோபிநாத் சின்னத்திரை மற்றும் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நபராக இருக்கும் நிலையில் அவருக்கு சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் சினிமா பிரபலங்கள் சிவகுமார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது கோபிநாத்துக்காக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு கோபிநாத் என்னுடைய தம்பி அவரிடம் பேசும்போது நான் பலமுறை வியந்து பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு கேள்வி ஞானமும் அதோடு பல விஷயமும் தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு சின்ன சின்ன தலைப்புகளை எடுத்து கோபி உரையாடும்போது அது சிறகு முளைத்து பறந்துபோவதை நான் பலமுறை வியந்து பார்த்துள்ளேன். 

நடிகர்களுக்கு இணையாக தொகுப்பாளர்களும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கோபிநாத்தின் ரசிகையாகவும் நான் இருக்கிறேன் என்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து, கோபிநாத் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்து சில தகவல்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார். கோபிநாத்துக்கு தெரிந்த ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி இருக்கிறது‌. அந்த நேரத்தில் கோபிநாத்துக்கு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லையாம் என்று பேசிக் கொண்டிருந்த கோபிநாத் டக்கென்று எனக்கு நினைவில் வந்தது தமிழிசை அக்கா தான். உடனே அவங்களுக்கு போன் போட்டேன்.

அப்போது அவர் அரசியல் சம்பந்தமாக டெல்லியில் ஆலோசனை மீட்டிங்கில் இருந்தார். வரிடம் குழந்தை உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறது என்று நான் சொன்னேன். உடனே நான் சொன்ன வார்த்தைகளை கேட்டு பிளைட்டை பிடித்து இங்கே வந்துவிட்டார். அந்த குழந்தைக்கு உரிய மருத்துவத்தை அதற்குரிய டாக்டர்களோடு சேர்ந்து செய்து அந்த குழந்தையை காப்பாற்றி விட்டார். அதுவும் அந்த குழந்தையை யாராலும் காப்பாற்ற முடியாது என்று நான் பார்த்த பல டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள் ஆனால் அந்த நேரத்தில் தமிழிசை அக்கா தான் அந்த குழந்தை கூடவே இருந்து ஆப்ரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றி இருந்தார். பிறகு குழந்தை நல்லபடியாக மாறியதும் உடனே டக்கென்று விமானம்  பிடித்து மீண்டும் டெல்லிக்கு சென்றார்.

அவருடைய பிசியான அரசியல் வாழ்க்கையில் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த ரிஸ்க் அன்றைக்கு நான் அவர் கூடவே இருந்து பார்த்த எனக்கு தான் தெரியும். இதுபோல ஒரு அக்கா கிடைக்க நான் வாழ்க்கையில் தவம் செய்திருக்க வேண்டும் என கூறினார். அந்த வீடியோ வைரலாக ஆளுநர் தமிழிசைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.