
நாடாளுமன்ற தேர்தலுக்கான நாட்களிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய நிலையில் தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் தலைமை அலுவலகம் ஈடுபட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் தற்போது தமிழக நாடாளுமன்ற தேர்தல் குறித்து எதிர்பார்ப்புகளும் கவனமும் அதிகரித்து வருகிறது ஏனென்றால் வட இந்தியாவில் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்ட பாஜக தற்போது தென் மாநிலங்கள் பக்கம் திரும்பி இருப்பதாகவும் தென் மாநிலங்களில் தனது வாக்கு வங்கியை உணர்த்துவதற்கான நடவடிக்கைகளை கடந்து இரண்டு வருடங்களாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதோடு அரசியல் விமர்சகர்களிடையே பெருமையாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் ஒரு கட்சி இரண்டு வருடத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியையும் மக்கள் செல்வாக்கையும் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்றும் இதனால் பாஜக தமிழகத்தில் இதுவரை ஆட்சி புரிந்து வந்த திமுக அதிமுக என்ற நிலையை நிச்சயம் மாற்றும் என்று கூறி வருகின்றனர்.
இதனால் தமிழகத்தின் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளும் தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் தொகுதி பங்கீடு என அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் ஒவ்வொரு கட்சியில் பரபரப்பாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்று உள்ள திமுக தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இதனால் திமுக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் பலத்த அடியை பெறும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர் அதற்கு ஏற்றார் போல் திமுகவின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தொகுதி வாரியாக பங்கேற்றுக் கொண்ட திமுக நிர்வாகிகள் பல அதிருப்திகள் மற்றும் கட்சிக்குள்ளே உள்ள சண்டைகளை முன் வைத்ததோடு சில எம் பி களை மீண்டும் திமுக சார்பாக எம்பியாக தேர்ந்தெடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இதற்கிடையில் அதிமுக பாஜகவின் கூட்டணி முறிந்ததும் திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. ஏனென்றால் 2021 திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து தொடர் சரிவுகளையும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்திகளையும் சந்தித்து வருகிறது திமுக இதனால் அடுத்த முறை திமுகவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படாது என்ற தகவல்களை மக்களே கூறி வருவதால் திமுக கூட்டணி கட்சிகள் மத்தியிலும் ஒரு பதட்ட நிலை ஏற்பட்டது இதனால் அதிமுக பக்கம் சேர்ந்து விடலாமா என்ற ஆலோசனைகளையும் கூட்டணி கட்சிகள் மேற்கொண்டதாகவும் எடப்பாடி பழனிசாமி இடம் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றியும் பேசியதாகவும் தகவல்கள் வெளியானது.
இதில் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவில் இணைவதற்கான உச்சகட்ட பேச்சு வார்த்தைகளில் இருந்ததாகவும் விரைவில் திமுகவுடன் பிரிந்து அதிமுகவில் சேரும் என்ற கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் வலுவெடுத்து வந்தது. அதுமட்டுமின்றி முக்கிய அரசியல் விமர்சகர்களும் இதைக் கூறியதால் பத்திரிகையாளர்கள் பலரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளிடம் இது குறித்த கேள்வியை முன்வைக்க அப்பொழுது நாங்கள் மொத்தம் நான்கு தொகுதிகளை கேட்க உள்ளோம் மூன்று பொது தொகுதி ஒரு தனி தொகுதி இதை யார் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என்ற வகையிலேயே திருமாவளவன் கூறி வந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் திருமாவளவன் தற்பொழுது 3 பொதுத்தொகுதி மற்றும் ஒரு தனி தொகுதியை கேட்டுள்ளதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்றும் தனித்தொகுதியில் தன் சின்னத்தில் தான் போட்டியிட உள்ளோம் என்பதையும் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். இப்படி தனது தொகுதி எண்ணிக்கையை மட்டுமே தொடர்ந்து குறிப்பிட்டு வரும் திருமாவளவன் எந்த தொகுதி யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக கூறாமல் வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த வந்தனர். மேலும் திமுகவை மிரட்டும் தோணியில் திருமாவளவன் பேசி வருகிறார் என வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது...