24 special

விருது வாங்கிய இன்ஸ்ட்டா பிரபலம்....கையோடு காப்பு மாட்டிய காவல்துறை!

Dharanish
Dharanish

சமூக வலைதளத்தில் அடிமையாகி கடக்கும் இந்த காலத்து இளைஞர்கள் இஸ்டாகிராம் போன்ற சமூக தளத்தில் தங்களது திறமையை காட்டுவதற்காக சில காரியத்தைகையில் எடுக்கின்றனர். உயிருக்கும் மேலாக நினைத்து கொண்டு லைக்ஸ்க்காக சில வேலைகளில் ஈடுபடுவது கடைசியில் சிறைக்கும் அல்லது யிருக்கும் ஆபத்தாக நேருகிறது. அப்படி தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராமில் லைக்ஸுக்கு ஆசைப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார் வாலிபர் ஒருவர்.


திருச்சி மாவட்டம் மலைக்கோட்டையை சேர்ந்தவர் தரணீஷ் இன்ஸ்டாகிராமில் கால் மீ சின்னப்பையன் என்ற பெயரில் பைக் ரேஸ் வீடியோ, நக்சிகுவை போன்ற சில வீடியோக்களை பதிவிடுவது இவரது வேலை. இதனால் ஒரு புரோஜனமும் இல்லை என்பது ஊர் அறிந்த கதை. இவர்களை எல்லாம் ஊக்கு விக்கும் விதமாக மாவட்டத்தில் ஒருவர் இருந்து கொண்டு அவர்களுக்கு அந்த மாவட்டத்தில் பெயரில் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக உள்ளவர்களை அழைத்து விருது வழங்குவதை ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கட்டிடத்தில் தனியார் துறை சார்பாக நடந்த 'கல்லை அவார்ட்ஸ் விழா' நடந்தது இதில் கலந்துகொண்ட தரனிஷுக்கும் சாகச விருது வழங்கப்பட்டது.  சுமார் 100கும் மேற்பட்டோருக்கு விருது கொடுத்துள்ளனர் எதோ நாட்டுக்கு துப்பாக்கி ஏந்தி விட்டு வந்தது போல் அவர்களை கவுரவித்துள்ளனர்.

இந்த தரனிஷ் என்ற 20 வயது இன்சாட்ஸ்கிராம் தளத்தில்  மதுபானங்கள் குடிப்பது, புகை பிடிப்பது, ரவுடிசம் போன்ற செயல்களில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இவர் விருது வாங்கிய கையேடு தனது நண்பரின் பைக்கை எடுத்து கொண்டு கள்ளக்குறிச்சி  மேம்பாலத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைத்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கள்ளக்குறிச்சி காவல் நிலையில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஒட்டியதாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சல்லி பைசாவுக்கு தேராத இன்ஸ்டாகிராம் லைக்ஸுக்கு ஆசைப்பட்டு இது போன்ற சம்பவத்தில் தற்போது உள்ள 2k கிட்ஸ்கள் இணையத்தில் மூழ்கி வருகின்றன.

எனவே இது போன்ற இளைஞர்களை கெடுக்கும் இன்ஸ்டாகிராமர்கள் மற்றும் யூடிப்பர்களுக்கு விருது வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கல்லை அவார்ட்ஸ் என்னும் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது யார் ? அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் யார் ?தனியார் பள்ளியில் இளைஞர்களை கெடுக்கும் இது போன்ற நபர்களுக்கு விருது வழங்க அனுமதித்தது யார் ?என்பது பலரது கேள்வியாக உள்ளது. தவறு செய்வது எந்த வகையில் தண்டனைக்குரிய குற்றமோ அதேபோல் தவறு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்குவதும் குற்றமே எனவே கள்ளக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற அந்த கல்லை அவார்ட்ஸ் விருது வழங்கும் குழுவினரை போலீசார் விசாரிக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.