புதுதில்லி : இந்திய விமானப்படையில் இணைந்துள்ள டஸால்ட் ரபேல் போர் விமானங்களில் மட்டுமே விஎஸ்1410/விஎஸ் 1510 வான்வழி ரெக்கார்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரெக்கார்டர்கள் இன்டர்நெட் இல்லாமலேயே செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பிளாக் பாக்ஸ் போல செயல்படுவதுடன் தகவல்களை சேமிக்கவும் உதவுகின்றன.
இந்திய பொதுத்துறை பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான HAL பிரான்ஸை சேர்ந்த சாப்ரான் டேட்டா ஸிஸ்டென்ஸ்க்கு விஎஸ் 1510 தொடர் மிஷன் ரெக்கார்டர்களை ஆர்டர் செய்துள்ளது. இந்த விஎஸ் 1510 ஏர்போர்ன் ரெக்கார்டர்கள் (சர்வர்கள் அல்லது டேட்டா ஸ்டோரேஜ் ஹார்ட் டிஸ்க்) ஆள் மற்றும் ஆளில்லா தரை மற்றும் வான் மற்றும் கடல் ரோந்து வாகனங்களின் ஆன் போர்டு செயல்பாட்டிற்க்காகவும்,
பணித்தரவு தகவல்கள் அதன் செயலாக்கம் தகவல்கள் சேமிப்பு மற்றும் தகவல்களை பரிமாறுதல் ஆகிய தொழில்நுட்பங்களுக்கு திறன்வாய்ந்த அதேசமயத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த மலிவான ரெக்கார்டர்களை வழங்க சாஃப்ரான் தயாராக இருப்பதாக அந்த நிறுவனத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விஎஸ் 1510 என்பது AES -256XTS குறியாக்க அல்காரிதத்தை கொண்ட திடநிலை சாதனங்களை உள்ளடக்கியதாகும்.
இதன் உயர்வரை வீடியோ செயலாக்கம் மற்றும் பதிவுசெய்தலினுக்கு 2TB சேமிப்பகத்தை கொண்டுள்ளதாக தெரிகிறது. இது பனி மற்றும் புயல் மற்றும் மழைப்பொழிவு உள்ளிட்ட சூழலிலும் திறம்பட செயல்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய போர்விமானங்களிலேயே இதுவரை ரபேல் போர்விமானங்களில் மட்டுமே இந்த ரெக்கார்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இந்திய விமானப்படையில் உள்ள தேஜாஸிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இது விமானப்படை தொழில்நுட்பத்தில் குறிப்பாக போர்விமானத்தில் இந்த தொழில்நுட்பம் ஒரு மேம்படுத்தப்பட்ட தொழிநுட்ப சீர்திருத்தம் என விமானப்படை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தேஜாஸ் ரக போர்விமானம் இந்திய விமானப்படைக்கு ஓர் வரப்பிரசாதம் என கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.