24 special

அக்சய்சின் மற்றும் POK..! பிஜேபி துணை முதல்வர் முக்கிய அறிவிப்பு..?

Amitsha and modi
Amitsha and modi

புதுதில்லி : பாரதிய ஜனதா கட்சி நிறுவனரான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவுதினம் இந்தியாவெங்கும் நேற்று பிஜேபியினரால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. பிஜேபி மூத்த தலைவரும் முன்னாள் துணைமுதல்வருமான கவிந்தர் குப்தா சத்வாரியில் ஜிபி பந்த் மருத்துவமனை வளாகத்தில் நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார்.


அவர் குறிப்பிடுகையில் " பாரத பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசின் அடுத்த நோக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சய்சின்னை கைப்பற்றுவதுதான். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டப்பிரிவை நீக்கியதே பிஜேபியின் முதல்பணி. இனி அந்த பணிகள் தொடரும். பிஜேபி தனது நோக்கங்களையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.

1947 அக்டோபரில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் முழுப்பகுதியையும் முழுவதுமாக மீட்டெடுக்க பிஜேபி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்ற உண்மையான மாநிலத்தின் ஒருபகுதியையே இந்தியா உடல்ரீதியாக இணைத்துள்ளது. அக்சய் சின் உள்ளிட்ட சீன ஆக்கிரமிப்பு (COK) மற்றும் POK இரண்டு அண்டைநாட்டு எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவான 370 சட்டப்பிரிவு பிஜேபி அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நமது அரசு POK வை பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் POK வை திரும்பப்பெறுவது தார்மீக ரீதியாக மற்றும் ஒழுக்க மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுப்படி இந்தியர்களின் கனவும் நிறைவேற்றப்படும்" என குப்தா தெரிவித்தார்.

மேலும் ஜம்முகாஷ்மீர் மாநில பிஜேபி துணைத்தலைவர் யுத்வீர் சேத்தி கூறுகையில் "சர்ச்சைக்குரிய 370 பிரிவை நீக்க தனது உயிரை நீத்த எஸ்பி முகர்ஜியின் கனவு பிஜேபி தலைமையிலான அரசால் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. 1951ல் பாரதிய ஜனசங்கத்தை தோற்றுவித்த எஸ்பி. முகர்ஜி நம் தேசத்தின் ஒற்றுமைக்காகவும் முன்னேற்றத்திற்க்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவரது உயர்ந்த இலட்சியங்கள் லட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்குவிக்கிறது.

தேசத்திற்காக தேசத்தை கட்டமைப்பதில் தங்கள் உயிரை தியாகம் செய்த தேசத்தலைவர்களை நமது தேசம் எப்போதும் நினைவில் கொண்டுள்ளது.  ஆர்டிக்கில் 370 பிரிவுக்கு எதிரான பிரச்சாரத்தை டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியே முதன்முதலில் வழிநடத்தினார்" என சேத்தி தெரிவித்துள்ளார்.