பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என பல துறைகளில் திறமை வாய்ந்து பல திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று அதில் சூப்பரான தனது பணியை ஆற்றி வந்த சினிமா துறை பிரபலம் தான் பிரேம்ஜி!!! இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான வெங்கட் பிரபுவின் தம்பி ஆவார். இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட சென்னை 28 திரைப்படத்திலிருந்து இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கொடுத்தது என்று கூறலாம். அந்த திரைப்படத்திற்கு பிறகு சந்தோஷ் சுப்பிரமணியம், கோவா போன்ற பல திரைப்படங்களில் இன்றுவரையிலும் தொடர்ந்து நடத்து வருகிறார்.
மேலும் இவர் கூறிய வசனங்களில் மிகவும் பிரபலமானது என்ன கொடுமை சார் இது?? என்பதும், எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா?? என்கின்ற டயலாக்கும் இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒரு டயலாக்காக இருந்து வருகிறது. பிரேம்ஜி பல வருடங்களாக சினிமா துறையில் பல திரைப்படங்களில் நடித்து இன்று அளவிலும் ஒரு young ஆன ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்களுக்கு தொடர்ந்து திருமணம் நடந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். ஆனால் இவ்வளவு நாட்கள் ஆகியும் பிரேம்ஜி இன்னும் திருமணம் முடிக்காதது ஏன்??? என்று அவரின் ரசிகர்களும் சினிமா துறையில் இருப்பவர்களும் கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அது போன்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது!! அது என்னவென்றால்...
இத்தனை காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டு வந்த பிரேம்ஜி தற்பொழுது தன் காதலித்து வந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இவர்களுக்கு வருகின்ற ஜூன் 9ம் தேதி திருமணம் நடக்க போகிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் இவர்களின் திருமண பத்திரிக்கையும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வந்தது. இந்த நிலையில் இத்திருமணம் குறித்து வெங்கட் பிரபு தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளார்!! அதில் அவர் எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து நல்ல நிகழ்வு நடக்க போகிறது!! பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா? இதை எல்லாவற்றையும் விட, பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ? என்ற கேள்வி தான் அதிகமாக கேட்கப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற ஜூன் 9ம் தேதி அவர் விரும்பிய பெண்ணுடன் அம்மாவின் ஆசிர்வாதத்துடன் சிறிய அளவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்!!
இத்திருமணம் மிகவும் எளிமையாக நடக்கப் போவது தெரியாமல் நண்பர் ஒருவர் பத்திரிக்கையினை இணையத்தில் பதிவிட்டு விட்டார் எனவும், அதனால் அனைவரும் இருந்த இடத்திலிருந்து மணமக்களை வாழ்த்துமாறும், திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது குறித்தும் கூறியிருந்தார். மேலும் மணப்பெண் மீடியாவை சேர்ந்தவர் என்று இணையங்களில் பரவி வந்த செய்திகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மணப்பெண் மீடியாவை சேர்ந்தவர் இல்லை என்றும் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்!! இது குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், ஒரு வழியாக பிரேம்ஜிக்கு திருமணம் நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் மணப்பெண் யார் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்!! பிரேம்ஜியின் திருமணம் குறித்த செய்திகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது!!