வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனை இன்று மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கொரோனா தொடங்கிய நாள் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடக்கத்தில் விதிக்கப்பட்டு தற்போதுவரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. அந்த வகையில் வாரத்தில் வெள்ளிக்கிழமை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் மூடியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இப்படி ஒரு தருணத்தில் வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருவதால் அனைத்து கோவில்களும் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது. இந்த அனைத்து வழக்குகளையும் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்துஸ் ஆகியோர் முன்பு வக்கீல்கள் வாதிட்டனர். பிறகு அட்வகேட் ஜெனரல் ஆர் சண்முகசுந்தரம் ஆஜராகி கொரோனா பரவல் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை. எனவே ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
மேலும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அதிகமாக பண்டிகைகள் வருவதால் கூட்டம் கூட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதனை அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முக்கியமாக எடுத்துக் கொண்ட நீதிபதிகள் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோவில்களை திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்த கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிபுணர்கள்., மருத்துவத் துறை வல்லுநர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது/
இந்த ஆலோசனையில் முக்கியமாக கூடுதல் தளர்வுகளுடன் கட்டுப்பாடு நீடிப்பது மற்றும் விஜயதசமி அன்று கோவில்கள் திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதகாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே வேளையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பத்து நாட்கள் முதல்வருக்கு அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் கோவிலை திறக்க அனுமதி தரவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என தெரிவித்திருந்தார்.
ஒருவேளை விஜயதசமியன்று கோவில்கள் திறக்கப்பட்டால் போராட்டம் நடக்க வாய்ப்பு இல்லை. அண்ணாமலையை சொன்னதுபோலவே முதல்வரும் ஏற்றுக்கொண்டார் என்பதை புரிந்துகொள்ளலாம். மற்றொரு பக்கம் கோவில்கள் திறந்தால் தான் கொரோனா வருமா என்றால் ஏன் மால்கள் சினிமா தியேட்டர்கள் மற்ற சில ஆலயங்கள் திறந்து இருக்கின்றது எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து இருக்கின்றனர்.
குறிப்பாக தற்போது ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருப்பதால் மக்கள் படையெடுக்கின்றனர். திரையரங்குகளுக்கு சென்றால் கொரோனா வராதா என கிண்டலும் கேலியுமாக பல்வேறு மீம்ஸ் சமூக வலைத்தளத்தில் உலாவர தொடங்கியிருக்கின்றது. மேலும் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, பொன்.ராதா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து மேமோரேண்டம் கொடுத்து உள்ளனர் என்பது கூடுதல் தகவல். கொடுத்த வேகத்தில் இன்று முதலவர் அவசர ஆலோசனை செய்கிறார் என்பது உற்று கவனிக்கப்படுகிறது.
எனவே வியதசமியன்று கோவில்கள் திறக்கப்படுமா என்பதை இன்று நடக்க உள்ள ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.